ஜாதி, மத வன்முறை ஏற்படும்போது பொதுமக்களை காப்பாற்றும் வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் சமுதாய-வகுப்பு நல்லிணக்கத்துக்கான கபீர் புரஸ்கார் விருது வழங்கப்படுவது வழக்கம். இந்த வகையில் இந்த வருடத்திற்கான சமுதாய-வகுப்பு நல்லிணக்கத்துக்கான கபீர் புரஸ்கார் விருதுக்கு தற்போது விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து பொதுத் துறை முதன்மைச் செயலாளர் யதீந்திர நாத் ஸ்வைன் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது, “இந்த விருதானது, ஒரு ஜாதி, இனம், வகுப்பைச் சேர்ந்தவர்கள், பிற ஜாதி, இன, வகுப்பைச் சேர்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிந்தால் அவரது உடல், மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படும். விண்ணப்பங்களுடன் அவை தொடர்பான ஆவணங்களை, தொடர்புடைய மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக அரசு முதன்மைச் செயலாளர், பொதுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு வரும் டிசம்பர் 15-ஆம் தேதிக்கு முன்பாக அனுப்ப வேண்டும். தேர்வு செய்யப்படுவோருக்கு, குடியரசு தினத்தன்று முதல்வரால் பதக்கம் வழங்கப்படும் என்று தமிழக அரசின் பொதுத் துறை முதன்மைச் செயலாளர் யதீந்தர நாத் ஸ்வைன் அறிவித்துள்ளார்.
இந்த விருதுக்கு தகுதியுள்ள நபர்கள் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
English summary – Tamil Nadu government announces last date for puraskar awards