chennai-girl-28102015பொதுமக்களிடம் சைவ உணவுகள் சாப்பிடுவதை ஊக்கப்படுத்தும் வகையிலும், இறைச்சிக்காக விலங்குகள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தவும் ‘பீட்டா’ ‘சைவ அழகி’ போட்டியை விலங்குகள் நல அமைப்பு சமீபத்தில் அறிவித்தது.

இதுகுறித்து பீட்டா விலங்குகள் நல அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ‘பீட்டா சைவ அழகி போட்டியில் கலந்து கொள்ள நாடு முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். இறுதிப்போட்டிக்கு ஆண்கள் பிரிவில் 10 பேர் மற்றும் பெண்கள் பிரிவில் 10 பேர் என மொத்தம் 20 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் பெண்கள் பிரிவில் சென்னையை சேர்ந்த 24 வயது ஸ்ம்ருதி ஸ்மிதா மொஹபத்ரா என்ற இளம்பெண்ணும் அடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதிபோட்டியில் வெற்றி பெற போட்டியாளர்கள் விலங்குகளை காப்பாற்றுவதற்கான அர்ப்பணிப்பு உணர்வு, பெறும் வாக்குகள் மற்றும் உடல்வாகு ஆகிய 3 அம்சங்களின் அடிப்படையில் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற 20 பேர்களுக்கும் பீட்டா இணையதளம் மூலமாக பொதுமக்கள் வாக்குகள் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ள்து. வாக்குகளை பொதுமக்கள் வரும் 28-ந்தேதிக்குள் அளிக்கவேண்டும்.

நவம்பர் 2-ந்தேதி சைவ அழகி போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள் விவரம் அறிவிக்கப்படும். போட்டியில் வெற்றிபெறுபவர்கள் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படுவார்கள். மேற்கண்ட தகவல் பீட்டா விலங்குகள் நல அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
English summary-Chennai girl elected for Pizza beauty contest