bsnl-29100215சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பி.எஸ்.என்.எல் இணைய இணைப்பு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களிடம் ஒருசிலர் அணுகி, மேம்பட்ட இணைய வசதி செய்து தருவதாகவும், அதற்கு குறிப்பிட்ட ஒரு தொகை செலுத்த வேண்டும் என்று கூறி பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டு வருவதாகவும், அத்தகைய நபர்களிடம் பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் பி.எஸ்.என்.எல் சென்னை தொலைத் தொடர்பு வட்டத்தின் பொது மேலாளர் கலாவதி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, “பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களின் எண்களை தொடர்புகொள்ளும் சிலர் பி.எஸ்.என்.எல் இணைய சேவை மாற்றி அமைக்கப்படவுள்ளது. ஃபைபர் தொழில்நுட்பத்தின்படி மேம்பட்ட இணைய வசதி வழங்கப்படும். இதற்காக பி.எஸ்.என்.எல் வழங்கிய பழைய மோடம் கருவியை திருப்பிக் கொடுத்தால், புதிய மோடம் வழங்கப்படும். இதற்கு ரூ.2 ஆயிரத்து 500 கட்டணம் ஆகும்” என்று கேட்பதாக புகார்கள் வந்துள்ளன.

இது சம்பந்தமாக பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் சிலர் எங்களிடம் விளக்கம் கேட்டனர். பி.எஸ்.என்.எல் எதற்காகவும் புதிதாக பணம் வசூலிக்கவில்லை. அப்படி யாராவது வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். வாடிக்கையாளர்கள் யாரும் வெளி நபர்கள் கூறுவதை நம்பி பணத்தையோ, இணையத்துக்கான மோடத்தையோ கொடுத்து ஏமாற வேண்டாம் என்று கூறியுள்ளார்.
English summary-BSNL advices people not to trust fraudulence