தமிழகத்தில் அவ்வப்போது ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் மாற்றம் நிகழ்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால் நேற்று ஒரே நாளில் திடீரென 58 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இதனால் அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பணியிடமாற்றம் செய்யப்பட்ட 58 ஐ.பி.எஸ். அதிகாரிகள் விபரம் வருமாறு:
1 சங்கர் ஜிவால் (ஐ.ஜி., சிறப்பு அதிரடிப்படை, சத்தியமங்கலம்) – சத்தியமங்கலம் சிறப்பு அதிரடிப்படையின் கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு.
2. ஏ.கே.விஸ்வநாதன் (கோவை மாநகர போலீஸ் ஆணையர்) – கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு – சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் தலைமை கண்காணிப்பு அதிகாரியாக நியமனம்
3. அபாஷ்குமார் (கூடுதல் ஆணையர், சட்டம்-ஒழுங்கு, தென்சென்னை) – தமிழ்நாடு போலீஸ் அகாதெமியின் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு
4. டி.வி.ரவிச்சந்திரன் (அயல்பணியாக மத்திய உள்துறையின் உளவுப்பிரிவு இணை இயக்குநர்) – கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு.
5. சீமா அகர்வால் (ஐ.ஜி., ரயில்வே) – மாநில குற்ற ஆவணக் காப்பக கூடுதல் டிஜிபி
6. ஆஷிஷ் பேங்கரா (கூடுதல் டிஜிபி, மாநில குற்ற ஆவணக் காப்பகம்) – சென்னை கூடுதல் டிஜிபி (செயலாக்கப்பிரிவு).
7. ஐ.ஜி.க்களாகப் பதவி உயர்வு: ஆயுஷ் மணி திவாரி (டிஐஜி, கோவை சரகம்) – சென்னை ஆயுதப்படை போலீஸ் ஐ.ஜி.
8. மகேஷ்வர் தயாள் (டிஐஜி, இந்திய அரசுப் பணியிலிருந்து திரும்பி காத்திருப்புப் பட்டியலில் உள்ளார்) — சென்னையிலுள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு-2 ஐ.ஜி.
9. கோவை, சேலத்துக்கு புதிய கமிஷனர்கள்: சுமித் சரண் (டிஐஜி, விழுப்புரம் சரகம்) – சேலம் மாநகர போலீஸ் கமிஷனர்.
10.ஏ.அமல்ராஜ் (சேலம் மாநகர போலீஸ் கமிஷனர்) – கோவை மாநகர போலீஸ் கமிஷனர்.
11. அபின் தினேஷ் மோடக் (டிஐஜி, தேசிய விசாரணை அமைப்பு, மும்பை) – ஐ.ஜி.யாக பதவி உயர்வு.
12. சஞ்சய் குமார் (டி.ஐ.ஜி., தஞ்சாவூர் சரகம்) – மாநில குற்ற ஆவணக் காப்பக ஐ.ஜி.
13. கே.பெரியய்யா (டி.ஐ.ஜி., போலீஸ் பயிற்சி கல்லூரி, சென்னை) – ஊர்க்காவல் படை ஐ.ஜி., சென்னை
14. ஏ.ஜி. மௌரியா (டி.ஐ.ஜி., தலைமையிடம், சென்னை) – சிறைத்துறை ஐ.ஜி., தலைமையிடம், சென்னை
15. ஏ.பாரி (டி.ஐ.ஜி., தலைமையிடம், சென்னை) – சென்னை தலைமையிட ஐ.ஜி.
16. என்.கே.செந்தாமரைகண்ணன் (டி.ஐ.ஜி., திருச்சி சரகம்) – சென்னை செயலாக்கப் பிரிவு ஐ.ஜி.
17. கே.என்.சத்தியமூர்த்தி (டி.ஐ.ஜி., காஞ்சிபுரம் சரகம்) – திருச்சி மத்தியச் சரக ஐ.ஜி.
18 எம்.ராமசுப்பிரமணி (ஐ.ஜி., மத்தியச் சரகம், திருச்சி) – சென்னை ரயில்வே போலீஸ் ஐ.ஜி.
19. சி.ஸ்ரீதர் (இணை ஆணையர், சென்னைப் பெருநகர கிழக்கு மண்டலம்) – தென் சென்னை கூடுதல் ஆணையராக பதவி உயர்வு.
20.எஸ்.முருகன் (டி.ஐ.ஜி., திருநெல்வேலி சரகம்) – மதுரை தெற்கு மண்டல ஐ.ஜி.யாக பதவி உயர்வு
21. அபய் குமார் சிங் (மதுரை தென் மண்டல ஐ.ஜி.) – அமலாக்கப்பிரிவு ஐ.ஜி., சென்னை.
22. வி.வரதராஜுலு (இணை ஆணையர், நுண்ணறிவுப் பிரிவு, சென்னை) – சென்னைப் பெருநகர நுண்ணறிவுப் பிரிவு கூடுதல் ஆணையராக பதவி உயர்வு.
23. எம்.சி.சாரங்கன் (டி.ஐ.ஜி., தொழில்நுட்பப் பிரிவு, சென்னை) – சென்னை தொழில்நுட்பப் பிரிவு ஐ.ஜி.யாக பதவி உயர்வு.
24. ஏ.ஜி. பொன்மாணிக்கவேல் (டி.ஐ.ஜி., சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு, சென்னை) – சென்னை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக பதவி உயர்வு.
25. டி.ஐ.ஜி.க்களாகப் பதவி உயர்வு: டி.எஸ்.அன்பு (எஸ்.பி., சி.பி.சி.ஐ.டி., சென்னை) – திருநெல்வேலி சரக டிஐஜி மற்றும் திருநெல்வேலி மாநகர ஆணையராக கூடுதல் பொறுப்பு.
26. பிரேம் ஆனந்த் சின்ஹா (மண்டல இயக்குநர், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, சென்னை) – அகில இந்தியப் பணியில் டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு.
27. தீபக் எம்.தாமோர் (எஸ்.பி., சிபிஐ, மும்பை) – டிஐஜியாகப் பதவி உயர்வு.
28. டி.செந்தில்குமார் (மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நீலகிரி மாவட்டம்) – தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு.
29. அனிசா ஹுசைன் (தமிழ்நாடு சிறப்புப் போலீஸ் 8-ஆவது படைப்பிரிவு, புதுதில்லி) – விழுப்புரம் சரக டிஐஜியாக பதவி உயர்வு.
30. நஜ்முல் ஹோடா (துணை ஆணையர், வண்ணாரப்பேட்டை, சென்னை) – சென்னைப் பெருநகர மேற்கு இணை ஆணையராக பதவி உயர்வு.
31. மஹேந்திர குமார் ரதோட் (அயல் பணியாக எஸ்.பி., ஆந்திரப்பிரதேசத்தில் பணியாற்றுகிறார்) – ஆந்திரப்பிரதேசத்தில் டிஐஜியாக உயர்வு.
32. எஸ்.மனோகரன் (துணை ஆணையர், அண்ணாநகர், சென்னை) – சென்னைப் பெருநகர கிழக்கு இணை ஆணையராக பதவி உயர்வு.
33. வி.வனிதா (கடலோர பாதுகாப்புப் பிரிவு எஸ்.பி., ராமநாதபுரம்) – டி.ஐ.ஜி., கடலோரப் பாதுகாப்புப் பிரிவு, சென்னை.
34.என்.அறிவுசெல்வம், (டி.ஐ.ஜி., திண்டுக்கல் சரகம்) — சென்னை காவல் பயிற்சி கல்லூரி டிஐஜி
35. எஸ்.பி.க்களாக பதவி உயர்வு: பி.அரவிந்தன் (மாவட்ட காவல் இணை கண்காணிப்பாளர், தென்காசி) – விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
36. எஸ்.மகேஸ்வரன் (மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விருதுநகர்) – துணை ஆணையர், தலைமையிடம், கோவை மாநகரம்
37. சந்தோஷ் ஹடிமானி (மாவட்ட காவல் இணை கண்காணிப்பாளர், மயிலாடுதுறை) – துணை ஆணையர், சட்டம்-ஒழுங்கு, திருநெல்வேலி.
38. டி.பி. சுரேஷ்குமார் (துணை ஆணையர், சட்டம்-ஒழுங்கு, திருநெல்வேலி மாநகரம்) – துணை ஆணையர், வண்ணாரப்பேட்டை, சென்னை.
39. முரளி ரம்பா (மாவட்ட காவல் இணை கண்காணிப்பாளர், கோவில்பட்டி) – மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நீலகிரி.
40. பண்டி கங்காதர் (மாவட்ட காவல் இணை கண்காணிப்பாளர், குளச்சல்) – துணை ஆணையர், சட்டம்-ஒழுங்கு,
41.மதுரை. வி.சசி மோகன் (மாவட்ட காவல் இணை கண்காணிப்பாளர், திருமங்கலம்) – துணை ஆணையர், சட்டம்-ஒழுங்கு, திருச்சி.
42. சரோஜ் குமார் தாக்கூர் (துணை ஆணையர், சட்டம்-ஒழுங்கு, திருச்சி) – மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருப்பூர்.
43. அமித்குமார் சிங் (மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருப்பூர்) – காவல் கண்காணிப்பாளர், சிபிசிஐடி, சென்னை.
44. நிஷா பார்த்திபன் ( மாவட்ட காவல் இணை கண்காணிப்பாளர், கோட்டகுப்பம், விழுப்புரம்) – துணை ஆணையர், சட்டம்-ஒழுங்கு, கோவை.
45. வி.ரம்யாபாரதி (துணை ஆணையர், குற்றப் பிரிவு, கோவை) – கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
46. டாக்டர் எம்.சுதாகர் (மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கோவை) – கியூ பிரிவு காவல் கண்காணிப்பாளர், சென்னை.
47. வந்திதா பாண்டே (மாவட்ட காவல் இணை கண்காணிப்பாளர், சிவகங்கை) – மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கரூர்.
48. கே.ஜோஷி நிர்மல் குமார் (மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கரூர்) – துணை ஆணையர், அண்ணாநகர்,
49.சென்னை. பி.எஸ்.சி. கல்யாண் (மாவட்ட காவல் இணை கண்காணிப்பாளர், தருமபுரி) – துணை ஆணையர், செயின்ட் தாமஸ் மவுண்ட், சென்னை.
50. திஷா மிட்டல் (தமிழ்நாடு 5-வது சிறப்பு காவல்படை, தலைவர், ஆவடி) – துணை ஆணையர், சட்டம்-ஒழுங்கு, திருப்பூர்.
51. ஆர்.திருநாவுக்கரசு (துணை ஆணையர், சட்டம்-ஒழுங்கு, குற்றப் பிரிவு, போக்குவரத்துப் பிரிவு, திருப்பூர்) – கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
52. பி.கண்ணம்மாள் (மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கிருஷ்ணகிரி) – துணை ஆணையர், சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து, தென் சென்னை.
53. எஸ்.லட்சுமி (துணை ஆணையர், போக்குவரத்து, தென்சென்னை) – துணை ஆணையர், தலைமையிடம், சென்னை.
54. சந்தோஷ்குமார் (துணை ஆணையர், தலைமையிடம், சென்னை) – தமிழ்நாடு கமாண்டோ படை பிரிவு எஸ்.பி.
55. அபிஷேக் தீட்சித் (எஸ்.பி., தமிழ்நாடு கமாண்டோ படை பிரிவு) – தலைவர், தமிழ்நாடு சிறப்புப் போலீஸின் 8-ஆவது படைப்பிரிவு, புதுதில்லி.
56. என்.எம்.மயில்வாகனன் (காவல் கண்காணிப்பாளர், ராமநாதபுரம்) – மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தஞ்சாவூர்.
57. ஜி.தருமராஜன் (காவல் கண்காணிப்பாளர், தஞ்சாவூர்) – காவல் கண்காணிப்பாளர், கன்னியாகுமரி.
58. என்.மணிவண்ணன் (காவல் கண்காணிப்பாளர், கன்னியாகுமரி) – காவல் கண்காணிப்பாளர், ராமநாதபுரம்.
மாற்றப்பட்டவர்களில் 5 பேர் கூடுதல் டிஜிபிக்களாகவும், 15 பேர் ஐ.ஜி.க்களாகவும், 9 பேர் கூடுதல் டிஐஜிக்களாகவும், 8 பேர் எஸ்.பிக்களாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். மீதமுள்ளவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English summary-The Tamil nadu State government has made a major reshuffle IAS officers.