temple-chennai-71115ஆந்திரா மாநிலத்தில் திருப்பதி திருமலை கோவிலுக்கு அடுத்து புகழ் பெற்ற கோவிலாக கருதப்படுவது காளகஸ்தியில் காளகஸ்தீஸ்வரர் சமேத பால ஞானாம்பிகா கோவில். பஞ்சபூத தலங்களில் இது வாயுலிங்கமாக கருதப்படுகிறது. இந்த கோவிலில் உலக நன்மைக்காக திருக்கல்யாண நிகழ்ச்சி தற்போது நடந்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் முதன் முறையாக வரும் டிசம்பர் 14-ந்தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காளகஸ்தீஸ்வரர் மற்றும் பாலஞானாம்பிகா சாமிகளின் திருக்கல்யாண உற்சவம் நடைபெறவுள்ளதாகவும், இதற்காக காளகஸ்தி கோவிலில் இருந்து உற்சவர் சாமிகளும், 30 குருக்களும் சென்னைக்கு வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் அதே தினத்தில் மதியம் 2 மணிக்கு 3 ஆயிரம் தம்பதிகள் பங்கேற்கும் ருத்ராட்ச பூஜை நடக்கிறது. இதில் பங்கேற்கும் தம்பதிகள் பாரம்பரிய உடைகளை அணிந்து வரவேண்டும். தொடர்ந்து மாலை 6 மணிக்கு காளகஸ்தீஸ்வரர், ஞானாம்பிகா (சிவா-பார்வதி) சாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. நிகழ்ச்சியில் 6 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகள் சாமி வேடமிட்டு வலம் வரும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இதில் சிறப்பாக செயல்பட்ட குழந்தைகளுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள், தமிழக அமைச்சர்கள் மற்றும் ஆந்திர மாநில மந்திரிகள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட 25 ஆயிரம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். விழாவையொட்டி டிசம்பர் முதல் வாரத்தில் சென்னை மாநகரின் முக்கிய பகுதிகளில் திருக்கல்யாண நிகழ்ச்சி குறித்து காளகஸ்தி கோவில் ரதம் செல்கிறது.
English summary-Srikalahasti deities Kalyana utsavam in Chennai for the first time ever.