rainகேரளா அருகே நேற்று நிலை கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து இன்று காலை தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் நிருபர்களிடம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

கேரளா அருகே நேற்று நிலை கொண்டு இருந்த மேலடுக்கு சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்தது. அது இன்று காலை தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். அதில் தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் மழை பெய்யும். வட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மழை எதிர்பார்க்கலாம். இதற்கிடையே ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை தெற்கு அந்தமான் கடற்பகுதியில் உருவாகியுள்ளது.

இது வருகிற 14ஆம் தேதி (சனிக்கிழமை) தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மீண்டும் பலத்த மழை பெய்யும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், செய்யூர் ஆகிய இடங்களில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது. அரக்கோணம் 9 செ.மீ., மதுராந்தகம் 8 செ.மீ., சென்னை விமான நிலையம், நத்தம், திருவையாறு, ஒட்டன்சத்திரம், 7 செ.மீ., தாம்பரம், நுங்கம்பாக்கம், அண்ணா பல்கலைக்கழகம், அன்னூர், செங்கல்பட்டு, பழனி 6 செ.மீ., கொளப்பாக்கம் 5 செ.மீ., பூந்தமல்லி, மரக்காணம், உத்திரமேரூர், தாமரைபாக்கம், செம்பரம்பாக்கம், 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

இவ்வாறு ரமணன் கூறியுள்ளார்.கூறியுள்ளார்.

English Summary:New Kasparov in Near Andaman.Heavy rain predicted on tomorrow onwards.