SmartCity_4c [Converted] copyபாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றான ஸ்மார்ட் சிட்டி உருவாக்குவதற்கான திட்டங்களைத் தேர்வு செய்து பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் மூலமாக இந்தியாவில் 99 நகரங்கள் பொலிவுறு நகரமாக மாற்றுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 12 நகரங்களில் சென்னையும் ஒன்றாகும்.

இத்திட்டத்தில், ஒரு பகுதியை மேம்படுத்தும் அங்கத்தின் கீழ் நகர சீரமைப்பு திட்டத்தின்படி ஜார்ஜ் டவுன், மயிலாப்பூர், தியாகராயநகர், சோழிங்கநல்லூர் ஆகிய நான்கு இடங்களுக்கு அதிகமாக பொதுமக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும் முக்கியப் பிரச்னைகளுக்குத் தீர்வாக வாகன நிறுத்த மேலாண்மை, போக்குவரத்து சார்ந்த வளர்ச்சி, தனித்தடத்துடன் கூடிய விரைவு போக்குவரத்து அமைப்பு, ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு, எல்இடி தெருவிளக்குகள், கழிவுகளை குறைத்தல்- மறுசுழற்சி செய்தல், மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை, மிதிவண்டி தடம் உள்ளிட்டவை அடங்கிய மோட்டார் வாகனமில்லாத போக்குவரத்து, போக்குவரத்து மேலாண்மை ஆகிய எட்டு திட்டங்களுக்கு ஆதரவு கோரப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வாக்கு: ஜார்ஜ் டவுன், மயிலாப்பூர், தியாகராய நகர், சோழிங்கநல்லூர் ஆகிய நான்கு பகுதிகளில் ஏதேனும் ஒன்றையும், எட்டு திட்டங்களில் ஏதேனும் ஒன்றையும் தேர்வுசெய்து பொதுமக்கள் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டல அலுவலங்களில் வழங்கப்படும் வாக்குச்சீட்டுகளை நேரடியாகப் பெற்று, அங்குள்ள பொலிவுறு நகரம் வாக்குப்பெட்டியிலோ சமர்ப்பிக்கலாம். பொதுமக்கள் தங்கள் வாக்குகளை நவம்பர் 20-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary:Smart City project, the public will vote Request to Chennai Corporation.