உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதியில் ‘உலக சர்க்கரை நோய் தினம்’ அனுசரிக்கப்படுகிறது. உலக மக்களிடம் சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சர்வதேச சர்க்கரை நோய் அமைப்பு (International Diabetes Federation) மற்றும் உலக நல நிறுவனம் (World Health Organisation) என்ற அமைப்புடன் இணைந்து இந்த சர்வதேச சர்க்கரை நோய் தினம் அனுசரிக்கும் முறையை கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் ஆரம்பித்து வைத்தது. இந்நிலையில் இன்று இந்தியாவில் தமிழகம் உள்பட அனைத்து பகுதிகளிலும் இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, சென்னை சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் சார்பில், நாளை அதாவது நவம்பர் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இலவச விழித்திரை பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சங்கர நேத்ராலயா மருத்துவ மையத்தில் (நவசுஜா மையம்) இந்த இலவச விழித்திரை பரிசோதனை முகாம் காலை 8 மணி முதல் நடைபெறும். பன்னாட்டு அரிமா சங்கம் மாவட்ட (ஏ8) அமைப்புடன் இணைந்து நடத்தப்படும் இந்த இலவச முகாமில் நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு கண் நீர் அழுத்தம், விழித்திரை ஆகிய பரிசோதனைகள் செய்யப்படும். சர்க்கரை நோய் காரணமாக விழித்திரை பாதிப்பு ஏற்பட்டோருக்கு (டயபட்டிக் ரெட்டினோபதி) இலவச மருத்துவ ஆலோசனையும் வழங்கப்படும்.
மேலும் சர்க்கரை நோய் காரணமாக விழித்திரை பாதிக்கப்படுவதைத் தடுத்துக் கொள்வது குறித்து சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர் அ.பன்னீர்செல்வம் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு உரை நிகழ்த்துகிறார். இந்த அரிய நிகழ்ச்சியில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களும், மற்ற பொதுமக்களும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
free medical camp in chennai on 15th Nov