சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்று ரயில்வே துறை. சென்னை புறநகர் ரயில் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியதால் பெரும்பாலா ரயில்கள் நிறுத்தப்பட்டன. திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் இன்னும் மழை நீர் பிளாட்பாரங்களில் தேங்கி நின்றது. மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றினாலும் மழைநீர் வடியாததால் ரெயில் போக்குவரத்து தடைப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லக்கூடிய மின்சார ரெயில்கள் கடந்த 2 நாட்களாக இயக்கப்படவில்லை.
கும்மிடிப்பூண்டியில் இருந்து திருவொற்றியூர் வரை மட்டுமே மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன. அதுபோல சென்ட்ரல், கடற்கரையில் இருந்தும் திருவொற்றியூர் வரை மட்டுமே ரெயில்கள் விடப்பட்டன. முழுமையான சேவை அளிக்க முடியாததால் கடந்த 2 நாட்களாக கும்மிடிப்பூண்டி மார்க்க பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று வெள்ள நீர் ஓரளவுக்கு வடிந்ததை அடுத்து சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு ரெயில்கள் இயக்கப்பட்டன. இருப்பினும் இந்த ரயில்கள் குறைந்தவேகத்தில் பாதுகாப்புடன் ரெயில்களை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் வட மாநிலங்களில் இருந்து கும்மிடிப்பூண்டி வழியாக வரக்கூடிய ரெயில்கள் மாற்றுப் பாதையில் வந்தன.
english summary-EMU service resume after 2 days in chennai