சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை இன்னும் பெய்து கொண்டிருக்கும் நிலையில் லட்சத்தீவு கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் கடலோர மாவட்டங்களில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் நிருபர்களிடம் கூறியுள்ளார்.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதிகளில் திடீர் கனமழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வருகிற செவ்வாய்கிழமை வரை மழை பெய்யும் என்றும் புதன் கிழமைக்கு பிறகு மழை குறையத்தொடங்கும் என்றும் கூறிய ரமணன், வங்கக்கடலில் தற்போது புதிய புயல் உருவாக எந்த வாய்ப்பும் இல்லை என்று கூறினார்.
ஆவடி, கெட்டி பகுதிகளில் 12 செ.மீ, பூண்டி, பூந்தமல்லியில் 10 செ.மீ, காட்டுக்குப்பத்தில் 9 செ.மீ மழை பெய்துள்ளது. வரும் 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும் மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டிய கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
இவ்வாறு ரமணன் கூறினார்.
English summary-low depression there will be rains in Chennai