school-11215சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த ஒரு மாதமாக இயங்காத நிலையில் மேலும் இரண்டு நாட்களுக்கு அதாவது இன்றும் நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மூன்று மாவட்ட ஆட்சி தலைவர்கள் அறிவித்துள்ளனர். தற்போது மழை நின்றுவிட்ட போதிலும், இன்னும் ஒருசில பள்ளி மற்றும் கல்லூரிகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செவ்வாய் மற்றும் புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களை தூய்மைப்படுத்த வேண்டிய பணி உள்ளதால் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மேற்கண்ட மூன்று மாவட்ட ஆட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் டிசம்பர் 14 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி தேர்வுகள் டிசம்பர் 13 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தந்த பல்கலைக்கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மு.ராஜாராம், பதிவாளர் கணேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முழுவதும் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் அங்கீகாரம் பெற்ற அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் (தானியங்கி கல்லூரிகள் தவிர) 14ஆம் தேதி வரை அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்படுகின்றன. இந்த தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளனர்.

இதே போல் தன்னாட்சி அதிகாரம் கொண்ட கல்லூரிகளைத் தவிர, பிற கல்லூரிகளின் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக பதிவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
english summary-Chennai schools & colleges remain closed for next 2 days