flood-111215-1கடந்த ஒரு மாதமாக பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் கடந்த வாரம் சென்னையே கிட்டத்தட்ட மூழ்கிய நிலையில் தற்போது ஓரளவு நிலைமை சீராகி வருகிறது. பல இடங்களில் வெள்ள நீர் வடிந்துவிட்டாலும் இன்னும் ஒருசில பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் இருக்கின்றது. இந்த பகுதியில் நிவாரண பணியும் தாமதம் அடைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் எந்தெந்த பகுதிகளில் இன்னும் முழுமையாக வெள்ள நீர் வடியாமல் இருக்கின்றது என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. வெள்ள பாதிப்பு ஏற்பட்ட 859 பகுதிகளில் நேற்று வரை 787 பகுதிகளில் வெள்ளம் முழுமையாக அகன்று விட்டது. மீதமுள்ள 72 இடங்கள் இன்னமும் வெள்ளத்தில் உள்ளது.

கொடுங்கையூர் ரிக்‌ஷா காலனி, பணிக்காரன் நகர், எழில்நகர் எ–பிளாக் பகுதியில் சுமார் அரை அடி தண்ணீர் உள்ளது. மதுரவாயல் பகுதியில் கந்தசாமி நகர், அய்யாவு நகர், கணபதி நகர், பாலாஜி நகர் பகுதியிலும் அரை அடி தண்ணீர் உள்ளது.

பூந்தமல்லி பகுதியில் பரிவாக்கம், மேல்மாநகர், சின்னராஜ் நகர், போலீஸ் குடியிருப்பு, பெரியார் நகர், அம்மன்கோவில் தெரு, பாளையத்தம்மன் நகர், முல்லாதோட்டம், ஸ்ரீநகர், வி.ஜி.என். அவென்யூ, சக்தி கார்ன், ராயல் கார்டன், பி.ஜி.அவென்யூ, ராமதாஸ் நகர், ஜானகி நகர் 2–வது தெரு, ஸ்டாலின் நகர், சந்திரன் நகர் பகுதியில் 1 அடி முதல் 2 அடி வரை தண்ணீர் உள்ளது.

மாங்காடு பகுதியில் ஓம் சக்தி நகர், ஜனனி நகர், செய்யது சாதிக் நகர், ஸ்ரீனிவாச நகர், பெரியகுளத்து வாஞ்சேரி, மதுராநகர், அய்யப்பன் நகர், கணபதி நகர், திருவள்ளுவர் நகர், ஈ.வி.பி.ராஜேஸ்வரி நகர், சி.ஆர்.ஆர்.புரம் பகுதியிலும் 2 அடி வரை தண்ணீர் உள்ளது.

கோட்டூர்புரம் தண்டாயுத பாணி தெருவில் 2 அடி தண்ணீர் உள்ளது.

நீலாங்கரை பகுதியில் பல்கலை நகர், மரைக்காயர் தெரு, கஜிரா கார்டன், ரங்கா ரெட்டி கார்டன், கஸ்தூரிபாய் நகர், கற்பக விநாயகர் நகர், எம்.ஜி. நகர், பெத்தேல் நகர் வடக்கு மற்றும் தெற்கு, அனுமன் காலனி, அண்ணா என்கிகோவ் பகுதியில் ½ அடி தண்ணீர் உள்ளது.

செம்மஞ்சேரி பகுதியில் கிளாசிக் ஷர்ம்ப், சுனாமி நகர், ஜேப்பியார் கல்லூரி, சுனாமி நகர், 9 மற்றும் 10–வது அவென்யூ பகுதியில் 2 அடி தண்ணீர் உள்ளது. ஜவகர் நகர், எழில்முக நகர் பகுதியில் 3 அடி தண்ணீர் உள்ளது.

மாம்பலம் கார்ப்பரேசன் காலனி, முத்துரங்கன் சாலை, கில்ட் ரோடு பகுதியில் ஒரு அடி தண்ணீர் உள்ளது.

விருகம்பாக்கம் மஜித் நகர், இந்திரா நகர், இளங்கோ நகர், அன்னை சத்யா நகர் பகுதியில் அரை அடி தண்ணீர் உள்ளது.

பள்ளிக்கரணை ராஜேஷ் நகர், சேரன் நகர், தியாகி விஸ்வநாதன் நகர், வேடந்தாங்கல், நூக்கம்பாளையம், புதுதாங்கல் பகுதியில் 3 அடி தண்ணீர் உள்ளது. பீர்க்கன்கரணை பாலாஜி நகர், அமுதம் நகர், வரதன் நகர், புத்தர்நகர், அண்ணா தெரு, சிங்கி கார்டன், அருள்நகர், டி.பி.கே. நகர் பகுதியில் 2 அடி தண்ணீர் உள்ளது.

திருவொற்றியூர் ஹை ரோடு, போலீஸ் குடியிருப்பு, எம்.ஆர்.எப். செக்போஸ்ட், நந்தி ஓடை பகுதியில் ஒரு அடி தண்ணீர் உள்ளது.

மாதவரம் சிவா விஷ்ணு நகர், வி.ஜி.பி. சந்தோசம் நகர், பாரதி நகர், பெரியமாத்தூர், புழல் சாரதி நகர், மணலி பஸ்கி பாளையம், மணலி புதுநகர் ஐ.ஜெ.புரம், ஜெனிபர் நகர், ராஜீவ்காந்தி நகர், கார்கில் நகர், ராஜாஜி நகர் பகுதிகளில் ஒரு அடி தண்ணீர் உள்ளது.

தாம்பரம், முடிச்சூரின் புறநகர் பகுதிகள், முகலிவாக்கம், வேளச்சேரியில் சில இடங்கள் வட சென்னையில் உள்ள சில பகுதிகள் இன்னமும் வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது. இந்த பகுதிகளில் பெரும்பாலானவற்றில் வெள்ள நீர் வடிவதற்கு உரிய வடிகால் வசதிகள் இல்லாததால் அதிகளவு வெள்ள நீர் இன்னும் தேங்கியுள்ளது. தெருக்களில் தேங்கி உள்ள தண்ணீரை வேறு இடத்துக்கு வெட்டி விடவும் வழி இல்லை. எனவே வெள்ளத்தில் மிதக்கும் பகுதிகளில் உள்ள தண்ணீரை மாற்று வழிகளில் அகற்ற ஆலோசனை நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து டெல்லியில் இருந்து விமானங்களில் ராட்சத மோட்டார் பம்புகள் வரவழைக்கப்பட்டுள்ளது. அவற்றின் மூலம் மிக பாதிப்புக்குள்ளான பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீர் அகற்றப்பட்டு வருகிறது.

வெள்ளத்தால் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கியுள்ளவர்கள் மேற்கண்ட இடங்களின் வெள்ள நீர் நிலைமையை தெரிந்து கொண்டு வீடு திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
English summary-Division-wise details of areas in Chennai Metro where flood-water has not receded