tasmacதமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்கள் ஒருசில முக்கிய தலைவர்கள், மற்றும் ஞானிகள் பிறந்த நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஜனவரி 24ஆம் ராமலிங்க அடிகளார் என்று கூறப்படும் வள்ளலாரின் நினைவு தினம் மற்றும் ஜனவரி 26ஆம் தேதி வரும் குடியரசு தினம் ஆகிய இரண்டு தினங்களிலும் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து  டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

வள்ளலார் நினைவுதினம் இம்மாதம் 24-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. நாட்டின் குடியரசு தினம் 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த இரு தினங்களிலும், மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படுவது வழக்கம். இந்தாண்டும், மாவட்டங்களில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை கடைகள், அதை சார்ந்த பார்கள், உரிமம் பெற்ற கிளப்களை சார்ந்த பார்கள், ஓட்டல்களை சேர்ந்த பார்கள், மற்றும் உரிமம் பெற்ற பார்கள் அனைத்தையும் மூட வேண்டும்.

அன்றைய தினங்களில் விற்பனை செய்யக் கூடாது. மீறினால், மதுபான விதிமுறைகள் படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டங்களில் அறிவித்துள்ளனர்.

English Summary: Order to Close a TASMAC on January 24 and 26.