சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் உள்ளிட்ட 8 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலர் கே.ஞானதேசிகன் வெளியிட்ட செய்திகுறிப்பு ஒன்று கூறுவதாவது:
சென்னை மாநகராட்சியின் ஆணையாளராக, முதன்மை செயலர் பணிநிலையில் பணியாற்றி வரும் விக்ரம் கபூர் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்தின் மேலான்மை இயக்குநராக முதன்மை செயலர் பணி நிலையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்தின் மேலான்மை இயக்குநராக பணியாற்றிய பி.சந்திரமோகன், சென்னை மாநகராட்சி ஆணையாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பிற ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் விவரங்கள் பின்வருமாறு: (அடைப்புக்குள் பழைய பதவி):
1. டி.பி. ராஜேஷ் – கரூர் மாவட்ட ஆட்சியர் (கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்)
2. சி.கதிரவன் – கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் (மதுரை மாநகராட்சி ஆணையர்)
3. என்.நந்தகுமார் – பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் (ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்)
4. எஸ்.ஜெயந்தி – திருப்பூர் மாவட்ட ஆட்சியர் (கரூர் மாவட்ட ஆட்சியர்)
5. கே.வீர ராகவ ராவ் – மதுரை மாவட்ட ஆட்சியர் (திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்)
6. ஜி.கோவிந்தராஜ் – சென்னை மாவட்டம் (திருப்பூர் மாவட்டம்)
7. எஸ்.நடராஜன் – ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் (ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குநர்)
8. சுந்தரவல்லி – திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் (சென்னை மாவட்ட ஆட்சியர்)
9. எல். சுப்பிரமணியன் – நிதி நிர்வாக இணை ஆணையர் (மதுரை மாவட்ட ஆட்சியர்).
இடமாற்றம் செய்யப்பட்ட அனைத்து அதிகாரிகளும் இன்னும் ஓரிரு நாட்களில் தங்கள் புதிய பணியை தொடர்வார்கள் என்று கூறப்படுகிறது.
English Summary: Chennai Corporation Commissioner and Collector transferred suddenly.