திருவிழா, பண்டிகை மற்றும் ஒருசில குறிப்பிட்ட நாட்களில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவிப்பது வழக்கமான ஒன்றே. அந்த வகையில் தற்போது சென்னை-நெல்லை இடையே சிறப்பு ரயில் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பபு ஒன்றில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னை எழும்பூர்-நெல்லை (வ.எண்.06183), சிறப்பு ரெயில் சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 29-ந்தேதி இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.45 மணிக்கு நெல்லை சென்றடையும்.
மறுமார்க்கமாக, நெல்லை-சென்னை எழும்பூர் (06184), சிறப்பு ரெயில் நெல்லையில் இருந்து வருகிற 31-ந்தேதி பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 4.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
இந்த ரெயில்கள், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி மற்றும் வாஞ்சிமணியாச்சி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இதில், நெல்லை-சென்னை எழும்பூர்(06184) செல்லும் ரெயில் மட்டும் மாம்பலம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும். ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
English Summary:In a January 29 special trains between Chennai and Tirunelveli.