trainரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் மணிக்கணக்கில் ரயில் நிலைய கவுண்டர்களில் காத்திருந்து தங்கள் பயணத்திற்கான டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்வதால் நேரம் வீணாவதோடு பல இன்னல்களைகளையும் சந்திக்க வேண்டியதுள்ளது. இதை தவிர்ப்பதற்காக பலர் தற்போது ஆன்லைனில் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்து வருகின்றனர். ஆனால் தற்போது அதற்கும் ஒருசில கட்டுப்பாடுகளை ரயில்வே துறை விதித்துள்ளது. இதன்படி ஒரு அக்கவுண்டில் இருந்து மாதம் ஒன்றுக்கு ஆறு முறை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்பம் வசதி முன்னேற்றத்தின் காரணமாக ரெயில்வே நிர்வாகம் இ-டிக்கெட் முறையை அறிமுகப்படுத்தியது. இண்டர்நெட் வசதி உள்லவர்கள் தங்களுடைய வீட்டிலிருந்தே தாங்கள் பயணம் செய்யும் டிக்கெட்டுக்களை பதிவு செய்து கொள்ளலாம்.

ஆனால் ஒரு சிலர் இந்த இ-டிக்கெட் முறைகளையும் தவறாக பயன்படுத்துவதாக ரயில்வே துறைக்கு பல புகார்கள் வந்து கொண்டிருக்கின்றது. ஒருவர் ரெயில்வே இணையதளமான ஐஆர்சிடிசி-யில் அக்கவுண்ட் வைத்துக்கொண்டு ஒரு மாதத்திற்கு 10 முறை முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் சமீப காலமாக பெரும்பாலான பயனாளர்கள் 6 தடவைக்கு மேல் பயணம் செய்ய முன்பதிவு செய்தது கிடையாது. சுமார் 10 சதவீதம் பேர் மட்டுமே 6 முறைக்கு மேல் பயன்படுத்துகின்றனர்.

இந்த 10 சதவீதமும் முறைகேடாக புக் செய்ய வாய்ப்பு உள்ளதாக சந்தேகப்படுவதாக கூறப்படுகிறது. இதை கட்டுப்படுத்த ரெயில்வே அமைச்சம் புதிய முடிவு எடுத்துள்ளது. அதன்படி ஐஆர்சிடிசி வெப்சைட்டில் கணக்கு வைத்திருப்போர் ஒரு மாதத்திற்கு 10 முறை டிக்கெட்டுக்கள் முன்பதிவுகள் செய்யலாம். அதை தற்போது 6 முறையாக குறைத்துள்ளது. இது வருகின்ற பிப்ரவரி 15-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

மேலும், காலை 8 மணி முதல் 10 மணி வரை ஒரு அக்கவுண்டுக்கு இரண்டு டிக்கெட்டுக்களும், தக்கல் நேரத்தில் காலை 10 மணி முதல் 12 மணி வரையும் இரண்டு டிக்கெட்டுக்கள்தான் வழங்கப்படும் என்று ரயில்வே துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

English Summary: Only 6 times per month on the train tickets online. Into force of the new Regulation.