சென்னை மாநகர பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டே பயணம் செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதாகவும் இதனால் அடிக்கடி பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர் மற்றும் மாணவர்களுக்கும் இடையே பிரச்சனை வந்து கொண்டிருப்பதாகவும் புகார்கள் வந்து கொண்ட்ய் வருகிறது.
இந்த ஆபத்தான பயணத்தால் சாலைகளில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர இனிவரும் வரும் அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவுகளை பொறுத்த சென்னை போக்குவரத்து முட்டிவு செய்துள்ளது
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கீழ்தள படிக்கட்டுகளுடன் பஸ்கள் விடப்பட்டன. சுமார் 2 ஆயிரம் டீலக்ஸ் பஸ்களில் தானியங்கி கதவுகளுடன் இந்த வசதி செய்யப்பட்டு இருந்தது. தற்போது அந்த பஸ்களில் தானியங்கி கதவுகள் எல்லாம் உடைந்து சேதமாகி கதவுகள் மூடப்படாமல் திறந்து கிடந்தோ அல்லது தானியங்கி கதவுகளே இல்லாமலோ ஓடுகின்றன.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு கமிட்டியை அமைந்துள்ளது. அந்த கமிட்டி 2018ஆம் ஆண்டுக்குள் அனைத்து பஸ்களிலும் தானியங்கி கதவுகள் பொறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
மேலும் இனி புதிதாக விடப்படும் அனைத்து மாநகர பஸ்களிலும் தானியங்கி கதவு வசதி பொறுத்தப்படும் என்றும் வரும் மாதங்களில் விடப்படும் சாதாரண பஸ்கள் முதல் டீலக்ஸ் பஸ்கள் வரை அனைத்து பஸ்களிலும் தானியங்கி கதவுகள் பொறுத்தப்படும் என்று போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
English Summary: Automatic doors of all buses to prevent stair-trip.