பாகிஸ்தான் நாட்டில் பெண் குழந்தைகளின் கல்விக்காக போராடிய மலாலா, தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் லண்டன் நகரில் சிகிச்சை பெற்று தற்போதும் பெண் கல்விக்காக குரல் கொடுத்து வருபவர் மலாலா. ஐ.நாவின் பொதுச்செயலாளர், அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோர்களிடம் பாராட்டு பெற்ற பெருமையும் இவருக்கு உண்டு. பாகிஸ்தான் மக்களுக்கு எதிர்காலத்தில் சேவை செய்ய விரும்புவதாக கூறியுள்ள மலாலா முதல்முறையாக இந்திய திரைப்படம் ஒன்றை பார்த்துள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
தனுஷ் நடித்த பாலிவுட் திரைப்படமான ராஜண்ணா’ என்ற திரைப்படத்தின் நாயகி சோனம்கபூர் நடித்த ‘நீரஜா’ என்ற திரைப்படம் கடந்த வெள்ளியன்று நாடு முழுவதும் வெளியானது. இந்த திரைப்படம் ஊடகங்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த திரைப்படம் மலாலாவுக்காக சிறப்பு காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த படத்தை பார்த்த மலாலா படக்குழுவினர்கள் அனைவரையும் பாராட்டியுள்ளார். குறிப்பாக நீரஜா கேரக்டரில் நடித்த சோனம்கபூரை பெரிதும் பாராட்டியுள்ளார்.
இந்த திரைப்படம் நீரஜா பனாட் என்ற வீரப்பெண்மணியின் நிஜவாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டது. மக்களுக்காக துணிச்சலான பல காரியங்கள் செய்த நீரஜா திரைப்படத்தை பெண் குழந்தைகளின் கல்விக்காக தனது உயிரையே இழக்க துணிந்தவர் பாகிஸ்தான் நாட்டின் மலாலா பார்த்து பாராட்டியிருப்பது பெரும் பொருத்தமாக கருதப்படுகிறாது. இதுகுறித்து நடிகை சோனம் கபூர் தனது டுவிட்டரில் கூறியபோது தனது படத்தை பார்த்து பாராட்டு தெரிவித்த மலாலாவுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.
English Summary: Bollywood actress acclaimed from Pakistan VIP.