பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் அறிவியல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் அறிவியல் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இவ்வருடத்தின் அறிவியல் திருவிழா நேற்று முதல் தொடங்கியுள்ளது. வரும் 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த அறிவியல் திருவிழாவுக்கு வருகை தருமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தமிழக அரசின் அறிவியல் நகரம் சார்பில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் நடைபெற்று வரும் இந்த அறிவியல் திருவிழாவை காண நேற்றைய முதல் நாளில் ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துஅன் வருகை தந்தனர்.
இந்த விழா,தினமும் காலை 10 மணி முதல், மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும். விழாவையொட்டி நடைபெற்று வரும் அறிவியல் கண்காட்சியில் சென்னையில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள், அறிவியல் ஆராய்ச்சி மையங்களின் சார்பில் பேரிடர் மேலாண்மையின் முக்கியத்துவம், நவீன நகரம், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு, பருப்பு பதப்படுத்தும் முறைகள், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கான தொழில்நுட்பங்கள் உள்பட பல்வேறு படைப்புகள் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் இடம்பெற்றுள்ளன. இந்தக் கண்காட்சியை பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
English Summary: Science festival in Chennai. The public interest.