beach29216உலகின் முன்னணி சுற்றுலா இணையதளமான டிரிப் அட்வைஸர் என்ற இணையதளம் உலகின் மிகச்சிறந்த கடற்கரைகள் மற்றும் ஆசியாவில் உள்ள மிகச்சிறந்த கடற்கரைகளை ஆய்வு செய்து பட்டியல் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் உலகில் மிகச்சிறந்த கடற்கரை பட்டியலில் இந்திய கடற்கரைகள் எதுவுமே இடம் பெறவில்லை. ஆயினும் இந்தியாவில் உள்ள மூன்று கடற்கரைகல் ஆசியாவின் சிறந்த கடற்கரைகள் பட்டியலில் உள்ளது.

ஆசியாவின் மிகச்சிறந்த 10 கடற்கரைகளில் கோவாவில் உள்ள அகோண்டா கடற்கரை 4வது இடத்திலும், பாலோலெம் கடற்கரை 8-வது இடத்தையும் மற்றும் அந்தமானில் உள்ள ராதாநகர் கடற்கரை 10-வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த 3 இந்திய கடற்கரைகளை தவிர சென்னையில் உள்ள கடற்கரைகள் உள்பட வேறு எந்த கடற்கரையும் டாப் 10-ல் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உலகின் தலைசிறந்த கடற்கரைகளின் பட்டியலில் இந்தியாவின் எந்த கடற்கரைகளும் இடம்பெறவில்லை. உலகின் தலைசிறந்த 3 கடற்கரைகள்: 1.கிரேஸ் பே பீச், கரீபியன், 2.பேய தோ சான்சோ, பிரேசில். 3.ப்ளேயே பரைசோ, கியூபா ஆகியவை இடம்பெற்றுள்ளன.

English summery: 3 of Indian beaches in top 10 beaches in Asia .