election_rules100216தமிழகத்தில் தேர்தல் தேதி மே 16 என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் காலம், பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபடும் காலம் ஆகியவை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை காலமாக இருப்பதால் அரசியல் கட்சிகள் விடுமுறையில் உள்ள மாணவர்களை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளது.

இதுகுறித்து ஆலோசனை செய்த தேர்தல் அதிகாரிகள் தேர்தல் பிரச்சாரத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஈடுபடுத்த கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ள உத்தரவு ஒன்றில் கூறியிருப்பதாவது:

சட்டப்பேரவைத் தேர்தல் மே 16-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஏப்ரல் இறுதியில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக இருக்கும். அந்த நேரத்தில் பள்ளிகள் விடுமுறை என்பதால் அரசியல் கட்சிகள் சார்பில் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்வது, கொடிகள் நடுவது, தோரணங்கள் கட்டுவது, பிரச்சாரக் கூட்டங்களில் அவர்கள் ஈடுபடுத்தப்படலாம் என்று புகார் எழுந்துள்ளது.

அரசியல் கட்சியினரின் குழந்தைத் தொழிலாளர் சட்ட விதிகளின்படி, தேர்தல் பிரச்சாரத்தில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்த அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary: Election campaign to ban the use of child labor . Rajesh lakkani directive