இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தங்கள் பயணத்திற்கு பயன்படுத்துவது ரயில்களைத்தான். ரயில்களில் இடம் கிடைக்காதபோதுதான் மக்கள் வேறு போக்குவரத்தை தேர்வு செய்கின்றனர். இதன் காரணமாக ரயில் நிலையத்தை பொதுமக்களை கவரும் வகையில் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்று ரயில்வே அதிகாரிகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்களில் மிகவும் சுத்தமாக இருக்கும் ரயில் நிலையங்கள் எவை எவை என ஒரு கருத்துக்கணிப்பு ஒன்று ஐஆர்சிடிசி அமைப்பால் எடுக்கப்பட்டது. தற்போது அதன் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதன்ப்டி இந்தியாவிலேயே மிகவும் சுத்தமான ரயில் நிலையம், குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் ரயில் நிலையம் என சர்வேயின் முடிவு தெரிவித்துள்ளது.
2016ஆம் ஆண்டு ஜனவரி – பிப்ரவரி மாதங்களுக்கு இடையே பல்வேறு ரயில் நிலையங்களிலுக்கு வந்த பயணிகளிடம் ஐஆர்சிடிசி கருத்து கேட்டது. அதன் அடிப்படையிலேயே இந்த தர வரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. சுமார் 1.34 லட்சம் பயணிகளிடம் நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்புல் தூய்மை தொடர்பாக 40 அம்சங்கள் குறித்து பயணிகள் கேள்விகள் கேட்கப்பட்டன.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட ரயில் நிலையங்கள், வருமான ரீதியாக இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. அதாவது ரூ.50 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் ரயில் நிலையங்கள் ஏ-1 என்ற பிரிவின் கீழும், ரூ.6 கோடி முதல் ரூ.50 கோடி வரை வருமானம் ஈட்டும் ரயில் நிலையங்கள் ஏ பிரிவின் கீழும் பட்டியல் இடப்பட்டன.
இதன் அடிப்படையில் கருத்துக்கணிப்பு எடுத்ததில் ஏ-1 பிரிவில் இந்தியாவிலேயே மிகவும் சுத்தமானதாக குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் ரயில் நிலையம் தேர்வாகியுள்ளது. 2-வது இடத்தில் ராஜ்கோட் ரயில் நிலையமும்; மூன்றாவது இடத்தில் பிலாஸ்பூர் ரயில் நிலையமும் ஈடுபட்டுள்ளன. 75 ரயில் நிலையங்கள் தர வரிசைப்படுத்தப்பட்டுள்ள இப்பிரிவில் பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதிக்குட்பட்ட ரயில் நிலையம் 65-வது இடத்தில் அதாவது மிகவும் அசுத்தமானது என்ற இடத்தில் இருக்கிறது.
ஏ- பிரிவில், பஞ்சாப் மாநிலம் பீஸ் ரயில் நிலையம் சுத்தமான ரயில் நிலைய பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. 5-வது இடத்தில் தமிழகத்தின் கும்பகோணம் ரயில் நிலையம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary : Survey was taken in India to find Clean Railway station.