கல்விக்கடன் அல்லது கிரெடிட் கார்டு கடன் இருந்தால் வங்கித்தேர்வு எழுத முடியாது என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிர்வாகம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதால் பொதுமக்கள் மட்டுமின்றி வங்கி ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வங்கிகளில் கல்விக்கடன் மற்றும் கிரெடிட் கார்டு கடன் போன்ற கடன்களை வாங்கி, அதை திருப்பி செலுத்தாதவர்கள் வங்கிகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கு பெற முடியாது என் எஸ்.பி.ஐ வங்கி வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய விதிமுறையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எஸ்.பி.ஐ வங்கியில் தமிழக கிளைகளில் காலியாக உள்ள ஆயிரத்து 420 பணியிடங்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு வரும் மே மாதம் மாதம் போட்டித் தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தேர்வில் பங்கேற்பவர்களுக்கு எஸ்.பி.ஐ. விதித்துள்ள புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது. இதன்படி கல்விக் கடன் வாங்கி திருப்பி செலுத்தாதவர்கள், கிரெடிட் கார்டு தவணையை முறையாக செலுத்தாதவர்கள் இந்த தேர்வில் பங்கேற்க முடியாது. இந்த அறிவிப்புக்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சில ஆயிரம் ரூபாய் கடன் தொகைக்காக, இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கையில் கை வைப்பது எந்த வகையில் நியாயாம் என தேர்வு எழுதுபவர்கள் மட்டுமின்றி வங்கி ஊழியர் சம்மேளனமும் எஸ்.பி.ஐ-யின் உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பெரு முதலாளிகள், தொழிலபதிபர்கள் பல லட்சம் கோடி ரூபாய் கடன்களை வசூலிக்காத வங்கிகள், ஆயிரக்கணக்கான ரூபாய்க்காக வேலையில்லாத இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவது எந்த வகையில் நியாயம் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளதோடு எஸ்பிஐ- வங்கி இந்த புதிய அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
English summary: Outstanding loan if the bank can not write the exam. SBI Action Notice