two layer trainரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் பயணிகளின் வசதிகளுக்கு ஏற்ப ரயில்வே துறை நவீன வசதிகளுடன் கூடிய புதிய ரயில்களை இந்த ஆண்டில் அறிமுகப்படுத்த ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் நவீன ரயில்களின் கட்டணமும் மிக அதிகமாக இருக்கும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் தாக்கல் ரயில்வே பட்ஜெட்டில் கட்டண உயர்வு ஏதும் அறிவிக்கப்படவில்லை எனினும் ரயில்வேயின் வருவாயை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்பதை சுட்டிக்காட்டினார். இதன்படி பயணிகளுக்கு பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய ரயில்கள் இயக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அவர் அறிவித்தார்.

அந்த வகையில் ஹம்சபர், தேஜஸ், முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்ட இரண்டு அடுக்கு ரயிலான உதய் உள்பட புதிய ரயில்கள் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தபட உள்ளன. ஹம்சஃபர் ரயில் முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்ட 3 அடுக்கு படுக்கை வசதி கொண்டதாகும், தேஜஸ் ரயில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் செல்லும். உதய் ரயிலில் இரட்டை அடுக்குடன் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. சாதாரண ரயில்களில் பயணிப்பவர்களைவிட 40 சதவீதம் கூடுதல் நபர்கள் இதில் பயணிக்க முடியும். இந்த ரயில்கள் அனைத்திலும் இப்போதுள்ள ரயல் கட்டணத்தைவிட 15 முதல் 30 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்க ரயில்வே அமைச்சக முடிவு செய்துள்ளது. நவீன வசதிக்கு ஏற்ப கட்டணமும் அதிகம் என்று ரயில்வே துறை அமைச்சகம் விளக்கமளித்தாலும், இது மறைமுக கட்டண உயர்வாகவே பார்க்கப்படுகிறது.

ஒரே பயண தூரத்துக்கு கூடுதல் கட்டணத்தில் ரயில்களை இயக்குவது என்பது ஏற்கெனவே நடைமுறையில் உள்ளதுதான். குறிப்பாக பண்டிகைக் காலங்கள், மக்கள் அதிகம் பயணிக்கும் விடுமுறைக் காலங்களில் சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. முன்பு, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும், அதிலும், மற்ற ரயில்களில் உள்ள கட்டணமே வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது இயக்கப்படும் ரயில்களில் சூழ்நிலைக்கு ஏற்க கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மஹானாமா எக்ஸ்பிரஸ், கதிமான் எக்ஸ்பிரஸ் ஆகிவற்றிலும் கூடுதல் கட்டணமே வசூலிக்கப்படுகிறது. அதிக வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்போது கூடுதலாக பணம் அளிப்பதை மக்கள் பெரிய செலவாகக் கருதுவதில்லை என்று ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருப்பவர்களும் இந்தியாவில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் புதிய வசதியை ஐஆர்சிடிசி விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இதன் மூலம் வெளிநாட்டவர்களும், வெளிநாடு வாழ் இந்தியர்களும் தாங்கள் தங்கியிருக்கும் நாடுகளில் இருந்தே ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். இப்போதுள்ள முறைப்படி வெளிநாட்டவர்களும், வெளிநாடுவாழ் இந்தியர்களும் இந்தியாவில் உள்ள சுற்றுலா ஏற்பாட்டாளர் அல்லது உறவினர் மூலம் மட்டுமே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். இந்தியாவில் இப்போது நேரடியாக ரயில்வே டிக்கெட் மையத்துக்கு சென்று டிக்கெட் எடுப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து, இணையதளம் வாயிலாக டிக்கெட் எடுப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்திய ரயில்வேயின் ஒட்டுமொத்த டிக்கெட் முன்பதிவில் 58 சதவீதம் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம்தான் நடைபெறுகிறது. ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஒரு நொடியில் 250 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்ய முடியும். எதிர்காலத்தில் இந்த வேகத்தை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

English summary : The two-layer, three layers of this year, the introduction of more modern trains. Railway Project