இந்தியா முழுவதும் சமையல் கியாஸ் பயன்படுத்துபவர்களில் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான வருட வருமானம் உள்ளவர்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் மானியம் தேவையில்லை என்று கருதுபவர்கள் எழுதிக்கொடுக்கலாம் என்று வானொலி, தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் 6 லட்சத்து 47 ஆயிரத்து 23 பேர் சமையல் கியாஸ் மானியம் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது:

வருட வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேல் உள்ளவர்களுக்கு சமையல் சியாஸ் மானியம் ரத்து செய்யப்படும் என்று கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அந்த உத்தரவை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தவில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டில் 6 லட்சத்து 47 ஆயிரத்து 23 பேர் சமையல் கியாஸ் மானியம் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துள்ளனர். இதில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசனில் 2 லட்சத்து 69 ஆயிரத்து 783 பேரும், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசனில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 741 பேரும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசனில் 2 லட்சத்து 73 ஆயிரத்து 499 பேரும் ஆக மொத்தம் 6 லட்சத்து 47 ஆயிரத்து 23 பேர் சமையல் கியாஸ் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர்.

இந்தியாவில் சிலிண்டர் மானியத்தை விட்டுக் கொடுத்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையிலான பட்டியலில் தமிழகம் 5வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சிலிண்டர்களின் மானியத்தை விட்டுக் கொடுத்தவர்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும் உத்தரப்பிரதேசம் இரண்டாவது இடத்திலும் மூன்றாவது இடத்தில் டெல்லியும், கர்நாடகா 4வது இடத்திலும் உள்ளன.

English Summary : Tamil Nadu gets 5th place in Gas subsidy