சென்னை உயர்நீதி மன்றங்கள் உள்பட தமிழகத்தின் அனைத்து நீதிமன்றங்களுக்கும் கோடையில் விடுமுறை அளிக்கப்பட்டு வருவது நடைமுறையாக இருந்து வரும் நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நாளை முதல் அதாவது மே 1ஆம் தேதி 31ஆம் தேதி வரை கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறையை அடுத்து, வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பதிவு செய்யப்படும் வழக்குகள் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் விசாரணை செய்யப்படும்ம் என்று உயர் நீதிமன்ற பதிவாளர் ரவீந்திரன் தெரிவித்தார். மேலும் அவசர வழக்குகளை மே1ம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நீதிபதிகள் சசிதரன், விமலா, கலையரசன் ஆகியோர் விசாரிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், மே 9 முதல் 15ஆம் தேதி வரை நீதிபதிகள் கிருபாகரன், முரளிதரன், பாரதிதாசன் ஆகியோரும், வரும் 16 முதல் 22ஆம் தேதி வரை நீதிபதிகள் கல்யாண சுந்தரம், கிருஷ்ணகுமார், மகாதேவன் ஆகியோரும் விசாரணை செய்வார்கள் என்றும் ரவீந்திரன் கூறினார். இதனை தொடர்ந்து வரும், 23 முதல் 31ஆம் தேதி வரை நீதிபதிகள் சத்தியநாராயணன், முரளிதரன், கோகுல்தாஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கும் எனவும் உயர் நீதிமன்ற பதிவாளர் ரவீந்திரன் தெரிவித்தார்.
English Summary: From May 1 to 31, the summer holidays of Madras High Court. Registrar notice.