12ஆம் வகுப்பு தேர்வு எழுதி முடித்த மாணவ, மாணவிகளுக்கு பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதியில் இருந்து ஆன்லைனில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று (திங்கள்கிழமை) முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்குநர் பேராசிரியர் கே.சேகர் தெரிவித்துள்ளார்.
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் பொறியியல், மருத்துவம் தவிர கலைக்கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படவுள்ளன. சென்னையில் ஒருசில தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் கடந்த வாரத்தில் இருந்தே விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் அனைத்து கல்லூரிகளிலும் விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம்.
இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநர் பேராசிரியர் கே.சேகர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியபோது, “தமிழகத்தில் 83 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை மே 2-ம் தேதி முதல் வழங்க அனைத்து கல்லூரி முதல்வர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி திங்கள் கிழமை (இன்று) முதல் அரசு கலை கல்லூரிகளில் விண்ணப் பம் வழங்கும் பணி தொடங்கும். பிளஸ்-2 தேர்வு முடிவு வெளிவந்து 10 நாட்கள் வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்” என்று கூறினார்.
English Summary : today distribute application for arts and science college