CBSE-logo4116நேற்று முன் தினம் சி.பி.எஸ்.இ எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான முதல்கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை நடத்தியது. இந்த தேர்வு இந்தியா முழுவதும் 52 நகரங்களில் 1040 மையங்களில் சுமார் 6 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள். தமிழகத்தில் மட்டூம் இந்த தேர்வுக்காக 26 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்த போதிலும் 22,750 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். மீதியுள்ள 3250 மாணவர்கள் இந்த தேர்வை எழுதவில்லை. இந்நிலையில் தமிழக மாணவர்கள் 3250 பேர் உள்பட இந்த தேர்வை எழுதாத அனைவரும் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிக்க முடியாது என சி.பி.எஸ்.இ அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:

கடந்த மாதம் 28-ந் தேதி உச்சநீதிம்மன்றம் பிறப்பித்த உத்தரவின்படி நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என்ற ஒரே நுழைவுத் தேர்வு மூலமாகவே மாணவர் சேர்க்கை நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி மே 1-ந் தேதி அகில இந்திய மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வை, முதல் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வாக மாற்றி நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தகுதித் தேர்வை எழுத வேண்டும். தேர்வை தவற விட்டால் ஜூலை 24-ந் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்வை எழுத முடியாது. முதல் கட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் மட்டுமே இரண்டாம் கட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும் என்று அறிவித்து இருந்தோம்.

ஆனாலும் 8 சதவீத மாணவர்கள் முதல்கட்ட தேர்வு எழுதவில்லை. தேர்வு எழுதாக மாணவர்கள் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பு படிக்க முடியாது. 2 கட்ட தேர்வு முடிவுகளையும் ஆகஸ்ட் 17-ந் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

English Summary: who don’t write a 1st entrance Exam they can do 2nd Exam? CBSE Officials.