தமிழகத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் நேற்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த விண்ணப்பத்தின் விலை ரூ.27 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், சில்லறை பிரச்சினையால் மாணவர்கள் அவதியுறுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சென்னை மாநில கல்லூரி உள்பட ஒருசில கல்லூரிகளில் பக்கத்தில் சில்லறை வாங்க கடைகளே இல்லாததால் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக விண்ணப்பம் விற்பனை செய்யும் இடத்தில் விற்பனையாளர் மற்றும் விண்ணப்பம் வாங்குபவர்களிடையே சிக்கல் ஏற்படுகிறது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் விண்ணப்பங்கள் பெற காலை முதலே மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் திரண்டிருந்தனர். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவினருக்கு விண்ணப்பங்கள் இலவசம் என்பதால் சில்லறை பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் இதர பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.27 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்ப விற்பனை தொடங்கும்போதே விண்ணப்பம் பெறுபவர்கள் சில்லறையாக வைத்துக்கொள்ளவும், சில்லறை இல்லாதவர்கள் மாற்றிக்கொண்டு வருமாறு கல்லூரி ஊழியர்கள் அறிவுறுத்தினர்.
சில்லறை வைத்திருந்தவர்கள் சரியான கட்டணம் கொடுத்து விண்ணப்பத்தை பெற்றனர். சில்லறை இல்லாதவர்கள், கடைகளில் சில்லறை கிடைக்காதவர்களுக்கு ரூ.3 சில்லறை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. சிலசமயம் காத்திருந்து சில்லறையைப் பெற்றுச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது
இதுகுறித்து விசாரித்தபோது, விண்ணப்பக் கட்டணம் ரூ.25 என்றும், பதிவுக் கட்டணம் ரூ.2 என்றும் நிர்ணயம் செய்யப்பட் டுள்ளதால் விண்ணப்பம் ரூ.27-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை கையிருப்பு வைத்துள்ளதால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை” என்று கல்லூரி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் விண்ணப்பம் வாங்க செல்லும் மாணவர்கள் சில்லறையாக கொண்டு செல்வது நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறது.
English Summary : Problem getting application for Arts and Science for some Silly issues.