தமிழகத்தில் சட்டமன்றதேர்தல் வரும் 16ஆம் தேதி நடைபெறவுள்ளதை அடுத்து தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதல் தேர்தல் நடத்தை விதிமுறை அமலாகியுள்ளது. எனவே தமிழக அரசின் முக்கிய முடிவுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதியைக் காரணம் காட்டி புதிய கட்டட வரைப்படத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்க வேண்டாம் என்றும் அவற்றை பரிசீலிக்கலாம் என்றும் தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சட்டப் பேரவை நடத்தை விதி அமலில் உள்ளதாகக் கூறி, புதிய கட்டுமானத் திட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக சென்னை ஐகோர்ட்டில் “இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள்’ சங்கங்களின் கூட்டமைப்பு பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரணை செய்த தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட அமர்வு, தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதைக் காரணம் காட்டி, கட்டுமானத் திட்ட அனுமதி கேட்கும் விண்ணப்பங்களை பரிசீலிக்காமல் இருக்கக்கூடாது. அந்த விண்ணப்பங்களை விரைவாகப் பரிசீலிக்கவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக ‘தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “திட்ட அனுமதி வழங்குவது என்பது அரசின் கொள்கை முடிவு தொடர்பானது அல்ல. இது வழக்கமான, அன்றாட பணிகள்தான். இந்தப் பணிகளை மேற்கொள்வதற்கு, தேர்தல் நடத்தை விதி குறுக்கே நிற்காது’ என்று வாதிட்டார்.

English Summary : Building permits can be considered. Madras High court notice.