கடந்த 16ஆம் தேதி 2 தொகுதிகள் தவிர தமிழகம் முழுவதும் 232 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை எண்ணப்படவுள்ளன. சென்னையில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் 900 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மண்டல வாரியாக அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் சந்திரமோகன் கூறியுள்ளார்.
சென்னை ரிப்பன் மாளிகையில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய சந்திரமோகன், தமிழக சட்டப்பேரவைக்கு பதிவான வாக்குகள் எண்ணும் பணி நாளை நடைபெறுகிறது. சென்னையில் 3 வாக்கு எண்ணும் மையங்களில் நாளை காலை வாக்கு எண்ணும் பணிகள் தொடங்குகின்றன. சென்னையில் வாக்கு எண்ணிக்கையில் 900 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
ஒரு கவுன்டருக்கு ஒரு பார்வையாளர் வீதம் நியமிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்கும் பணியில் துணை ராணுவப் படை ஈடுபடுத்தப்பட உள்ளது.
ஒவ்வொரு இயந்திரத்திலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டதும் அந்த ரவுண்ட் முடிந்ததும் முடிவு வெளியாகும். 14 மேஜைகள் அமைக்கப்படும் இவ்வாறு சந்திரமோகன் தெரிவித்தார்.
English Summary : Chennai Corporation Commissioner explains about vote counting preparations.