தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிகிறது. சற்று முன்னர் முன்னிலை நிலவரப்படி அதிமுக 132 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 95 தொகுதிகளிலும், பாமக 2 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மக்கள் நலக்கூட்டணி ஒரு இடத்தில் கூட முன்னிலை வகிக்கவில்லை. அந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் பின்னடைவு அடைந்திருப்பதோடு மூன்றாவது இடத்தில் உள்ளார்.

நட்சத்திர வேட்பாளர்களான ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ஆரம்பத்தில் முன்னிலை வகித்தாலும் தற்போது அவர் மூன்றாவது இடத்தில் உள்ளார். பென்னகரம் தொகுதியில் அன்புமணியை எதிர்த்து நின்ற திமுகவின் இன்பசேகரன் 6765 வாக்குகள் பெற்று முதலிடத்திலும், அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமி 5365 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்திலும் இருக்கிறார்கள்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெருவாரியான முன்னிலை வகித்து வரும் நிலையில், ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மோடி தனது டுவிட்டரில், “சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்காக ஜெயலலிதாவுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

English Summary : AIADMK won the election. Modi congratulates Jayalalitha.