பாரத பிரதமர் நரேந்திரமோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று ‘‘மன் கி பாத்’’ (மனதில் உள்ளதை பேசுகிறேன்) என்ற பெயரில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த உரையில் இந்தியாவில் உள்ள பலர் வானொலியில் கேட்டு வருகின்றனர். அதேபோல் பலர் இந்த உரை ஒலிபரப்பும் நேரத்தில் கேட்க தவறியும் உள்ளனர்.
இந்நிஅலியில் பிரதமரின் வானொலி உரையை கேட்க முடியாதவர்கள், தங்களது செல்போனில் அவரது உரையை கேட்கும் வகையில் ‘1922’ என்ற இலவச எண்ணை தொலைத்தொடர்பு அமைச்சகம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தொலை தொடர்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: ‘‘இந்தியாவில் எந்த பகுதியில் இருந்தும் இந்த இலவச எண்ணை அழைக்கலாம். உங்களது செல்போனில் இருந்து 1922 என்ற எண்ணுக்கு அழைக்க வேண்டும். உங்களது அழைப்பு ஏற்கப்பட்டதும் உங்கள் அழைப்புக்கு நன்றி என்று கூறிவிட்டு அழைப்பு துண்டிக்கப்பட்டு விடும்.
பின்னர் ரேடியோவில் பிரதமரின் உரை ஒலிபரப்பப்படும் போது உங்களது செல்போனுக்கு அழைப்பு வரும், அதனை ஏற்று நீங்கள் பிரதமரின் உரையை முழுமையாக கேட்கலாம்.’’
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
English Summary : The introduction of the new number in a cell phone to listen to the speech of the Prime Minister