தமிழக முதலமைச்சராக நேற்று மீண்டும் ஜெயலலிதாவும், அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் முதல்வர் பதவியை ஏற்றவுடன் கோட்டை வந்த முதல்வர் ஜெயலலிதா, பள்ளியில் காலை சிற்றுண்டி, விவசாய பயிர்க்கடன் ரத்து, டாஸ்மாக் கடைகளின் நேரம் குறைத்தல், 100 யூனிட் மின்சாரம் இலவசம் மற்றும் தாலிக்கு 8 கிராம் தங்கம் ஆகிய உத்தரவுகளில் கையெழுத்திடார்.
மேலும் நேற்று மாலையில் திடீரென 17 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். தேர்தலின்போது தேர்தல் ஆணையத்தால் மாற்றப்பட்டவர்கள் உள்பட ஒருசில அதிகாரிகளை மாற்றி தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. இதில் சென்னை போலீஸ் கமிஷனராக மீண்டும் டி.கே.தேவராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாற்றப்பட்ட 17 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குறித்த விபரங்கள் பின்வருமாறு:
1. சத்திய பிரதா சாகு – போக்குவரத்து ஆணையர்.
2. டாக்டர் டி. கார்த்திகேயன் – தொல்லியல் துறை இயக்குனர்.
3.- சமயமூர்த்தி – வேலைவாய்ப்பு மற்றும பயிற்சித்துறை இயக்குனர்.
4. கணேஷ்- புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர்.
5. டாக்டர் கருணாகரன் – நெல்லை மாவட்ட கலெக்டர்.
6. டாக்டர் நந்தகோபால்- வேலூர் மாவட்ட கலெக்டர்.
7. டி.என்.ஹரிஹரன்.- திண்டுக்கல மாவட்ட கலெக்டர்.
8. வெங்கடாசலம் – தேனி மாவட்ட கலெக்டர்.
9. வி.சம்பத் – சேலம் மாவட்ட கலெக்டர்.
10. மதிவானண்- திருவாரூர் மாவட்ட கலெக்டர்.
11. ஞானசேகரன் – திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்.
12. பூஜா குல்கர்னி- மாநில திட்ட இயக்குனர்.
13.எஸ். நாகராஜன் – அரசு இ. சேவை மைய இயக்குனர்.
14.ராஜேந்திர ரத்தனு0 பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்.
15. டி.என்.வெங்கடேஷ்- துணி நூல் கூட்டுறவு சங்க மேலாண் இயக்குனர்.
16.டாக்டர் எஸ். ஸ்வர்ணா- டுபிட்கோ தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர்.
17 . குமரகுரபரன் – தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கார்பரேஷன் கூடுதல் பொறுப்பு
இதேபோல் மாற்றப்பட்ட 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குறித்த விபரங்கள் பின்வருமாறு:
1. சென்னை பெருநகர காவல் ஆணையராக டி.கே.ராஜேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2. அமலாக்கப்பிரிவு ஏடிஜிபியாக அசுதோஷ் சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார்.
3. தமிழக சட்டம்- ஒழுங்கு ஏடிஜிபியாக திரிபாதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
4. கடலோர பாதுகாப்பு குழும ஏடிஜிபியாக சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டுள்ளார்.
5. சிபிசிஐடி ஏடிஜிபியாக கரண் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
6. உளவுத்துறை ஐஜியாக சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
7. தருமபுரி மாவட்ட எஸ்பி பண்டி கங்காதர், கிருஷ்ணகிரி மாவட்டத்தையும் கவனிப்பார்.
English Summary : Chennai police commissioner, IAS and IPS officers transferred.