10thresult2016பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து இருந்தபோதிலும் கடந்த ஆண்டுகளில் இருந்ததைவிட மாணவர்களின் தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் கடந்த 2014-ல் 88.0%, 2015-ல் 90.5% ஆக இருந்தது. இந்த ஆண்டு மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 91.3% (.8%) ஆக அதிகரித்துள்ளது. மாணவிகள் தேர்ச்சி விகிதம் கடந்த 2014-ல் 93.6%, 2015-ல் 95.4%, 2016-ல் 95.9% என உள்ளது.

இந்நிலையில் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதங்களை ஒப்பிடுகையில் முதல் ஐந்து இடம் பிடித்த மாவட்டங்களாக ஈரோடு – 98.48 %, கன்னியாகுமரி – 98.17 %, விருதுநகர் – 97.61 %, நாமநாதபுரம் – 97.10 %, தூத்துக்குடி – 96.96 %, என்றும் கடைசி 5 இடம் பிடித்த மாவட்டங்களாக வேலூர் – 86.49 %, விழுப்புரம் – 88.07 %, திருவண்ணாமலை – 89.03 %, கடலூர் – 89.13 %, திருவாரூர் -89.33 % ஆகவும் உள்ளது. மேலும் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் சென்னை 20வது இடத்தையே பிடித்துள்ளது.

புதுவை மாநிலத்தில் 8 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரி தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப்பள்ளி, கதிர்காமம், அன்னை சாரதாதேவி அரசு உயர்நிலைப்பள்ளி, வாதானூர், சவரிராயலு நாயகர் அரசு உயர்நிலைப்பள்ளி, புதுச்சேரி, பண்டிட் துரைசாமி அரசு உயர்நிலைப் பள்ளி, பெத்துசெட்டிப்பேட், இந்திரா காந்தி அரசு உயர்நிலைப்பள்ளி, காட்டேரிக்குப்பம், டிகேஆர் அரசு உயர்நிலைப் பள்ளி, தேங்காய்த்திட்டு, டி.சைமன் கார்டினல் அரசு உயர்நிலைப்பள்ளி, பெரியார் நகர், பளளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. கவிஞரேறு வாணிதாசனார் அரசு உயர்நிலைப்பள்ளி, 98.96 சதவீதம், அரசு உயர்நிலைப் பள்ளி சோரப்பட்டு 98.36 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளளன.

English Summary: 10th Results – Chennai, 20th Place in Pass Percentage.