ஷெட்யூல்ட் டிரைப்ஸ் என்று கூறப்படும் எஸ்.டி. பிரிவில் நரிக்குறவர், குருவிக்காரர், மலையாளி கவுண்டர்கள் ஆகிய இனத்தவர்களை சேர்க்கும் சட்டத்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதுடெல்லியில் நேற்று பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பட்டியல் இனத்தவருக்கான சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஒப்புதலை வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.

மிழகத்தைச் சேர்ந்த மலையாளி கவுண்டர், நரிக்குறவர், குருவிக்காரர் ஆகிய இனத்தோரை பழங்குடியினர் பிரிவில் சேர்க்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதால் அந்த இனத்தவர்களை சேர்ந்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் கூடுதல் பயன் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் புதுச்சேரியைச் சேர்ந்த இருளர் இனத்தைச் சேர்ந்தவர்களையும் இந்த பழங்குடி இனத்தவர் பட்டியலில் சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதே போல் அசாம், சத்தீஸ்கர், திரிபுரா மாநிலங்களிலும் மிகவும் பின் தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்களை பழங்குடிப்பிரிவில் சேர்க்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் நரிக்குறவர் இனத்தை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க ஒப்புதல் அளித்ததற்காக அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

English Summary : Central Government approval to join some more caste in ST.