ரயிலில் பயணம் செய்பவர்கள் தாங்கள் ரிசர்வ் செய்திருந்த டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருந்தால் டிக்கெட் உறுதியாகுமோ? இல்லையோ? என இதுவரை கவலைப்பட்டு கொண்டிருந்த நிலை தற்போது மாறியுள்ளது. ஆம், வெயிட்டிங் லிஸ்ட்டில் உள்ள டிக்கெட் ஒருவேளை உறுதியாகவில்லை அவர்களுக்கு விமானத்தில் செல்லும் வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது.
ஐஆர்சிடிசியும், ஏர் இந்தியாவும் இதற்காக ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின்படி ஒருசில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது முதல்கட்டமாக ராஜ்தானி ரயிலில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து படிப்படியாக அனைத்து ரயில்களிலும் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
முதல் வகுப்பு டிக்கெட் உறுதியாகவில்லை எனில் எந்தவிதமான கட்டணம் இல்லாமல் விமானத்தில் பயணம் செய்யலாம். ஆனால் 2 அல்லது 3ஆம் வகுப்புகளில் டிக்கெட் கிடைக்கவில்லை எனில் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும். அதாவது ரூ.1500 முதல் 2000 வரை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
டிக்கெட் வெயிட்டிங்கில் இருக்கும் பயணிகளின் விவரங்களை ஐஆர்சிடிசி, ஏர் இந்தியாவுக்கு அனுப்பும். விமானத்தில் செல்வதற்கு பயணி தயாராக இருந்தால் அடுத்த 24 மணி நேரத்தில் விமானத்தில் பயணம் செய்வதற்கான ஏற்பாடு செய்யப்படும். ஆனால் இது விமானத்தில் காலியாக இருக்கும் இருக்கைகளை பொருத்தது. ‘முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் இது செயல்படுத்தப்படும்.
எனவே இனிமேல் நம்முடைய ரயில் டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருந்தாலும் கவலைப்பட தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary: If you can travel by flight reserved a Train ticket.