தெற்கு ரயில்வே துறை பயணிகளின் வசதிக்காக அவ்வப்போது சிறப்பு மற்றும் சுவிதா ரயில்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வரும் நிலையில் சென்னையில் இருந்து திருநெல்வேலி, எர்ணாகுளம், ஹவுராவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவுள்ளதாக தற்போது அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:
1. சென்னை எழும்பூர் – திருநெல்வேலி சிறப்பு கட்டண ரயில்: ரயில் எண் 06003 என்ற் எண்ணுள்ள ரயில் ஜூன் 3, 10 ஆம் தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.05 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 10.45 திருநெல்வேலி சென்றடையும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
2. திருநெல்வேலி – சென்னை எழும்பூர் சுவிதா சிறப்பு ரயில்: ரயில் எண் 06002 என்ற எண்ணுள்ள ரயில் ஜூன் 5,12 ஆம் தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த ரயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
3.சென்னை சென்ட்ரல் – எர்ணாகுளம் சுவிதா அதிவிரைவு சிறப்பு ரயில்: ரயில் எண் 00613 என்ற எண்ணுள்ள ரயில் ஜூன் 3, ஜூன் 10 ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். அதேபோல் மறுமார்க்கத்தில் ரயில் எண் 00614 என்ற எண்ணுள்ள ரயில் ஜூன் 5, 12 ஆம் தேதி எர்ணாகுளத்தில் இருந்து இரவு 7 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர் மற்றும் அலுவா ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
4. சென்னை சென்ட்ரல் – ஹெளரா இடையே ஏசி அதிவிரைவு சிறப்பு கட்டண ரயில்: ரயில் எண் 00842 என்ற எண்ணுள்ள ரயில் ஜூன் 5 ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 5.10 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் மாலை 6.30 மணிக்கு ஹெளரா சென்றடையும். இந்த ரயில் நெல்லூர், விஜயவாடா, ராஜமுந்தரி, துவ்வாடா, விசாகபட்டினம், பிரம்மபூர், குர்தா சாலை, புவனேஸ்வரம் கட்டாக், பாத்ரக், காரக்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மேற்கண்ட சிறப்பு மற்றும் சுவித ரயில்களை பயணிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
English Summary : Chennai to Tirunelveli, Ernakulam, Howrah special trains.