சென்னையில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் புத்தகக்கண்காட்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு டிசம்பரில் கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டதால் ஜூன் மாதத்திற்கு புத்தக கண்காட்சி தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 1ஆம் தேதியில் இருந்து புத்தகக்கண்காட்சி நடைபெற்று வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையின் காரணமாக கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக புத்தக கண்காட்சி நடக்கும் இடத்திற்குள் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் பல்வேறு ஸ்டால்களில் இருந்த புத்தகங்கள் நனைந்து பாதிக்கப்பட்டது. இதனால் பதிப்பாளர்கள் மற்றும் வாசகர்கள் வேதனை அடைந்தனர். மேலும் மழை காரணமாக புத்தகக் கண்காட்சியை பார்க்க வரும் மக்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டதாக பதிப்பாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று புத்தக் கண்காட்சியை பார்க்க வரும் மக்களும் குறைவான எண்ணிக்கையிலேயே இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
English Summary : Chennai Book Fair affects because of rain.