ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு அடுத்து பிரபலமான சமூக வலைத்தளம் லிங்க்டு இன். மற்ற சமூக வலைத்தளங்கள் அரசியல், சினிமா போன்ற கருத்துக்களை அலசி வரும் நிலையில் லிங்க்டு இன் தொழில் வல்லுனர்களுக்கான சமூக வலைத்தளமாக செயல்பட்டு வருகிறது. ஏராளமான தொழில் வல்லுனர்கள் உறுப்பினர்களாக இந்த லிங்க்டு இன் சமூக வலைத்தளத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது விலைக்கு வாங்க முடிவு செய்துள்ளது.
இந்நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் 26.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகைக்கு விலைக்கு வாங்க ஒப்புக் கொண்டுள்ளது. இந்த தகவலை இரு நிறுவனங்களும் அறிக்கை மூலம் உறுதி செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
லிங்க்டு இன் சமூக வலைத்தள நிறுவனத்தின் பங்கு ஒன்றிற்கு 196 டாலர்கள் வழங்க மைக்ரோசாப்ட் ஒப்புக் கொண்டது. லிங்க்டு இன் நிறுவனத்தின் இன்றைய பங்குச் சந்தை இறுதி விலையைக் காட்டிலும் இது 49.5% பிரீமியம் விலையாகும்.
தற்போது செயல்ப்ட்டு வரும் லிங்க்டு இன் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியாக ஜெஃப் வெய்னர் நீடிப்பார் என்றும் எனினும் இவர் மைக்ரோசாப்ட் சி.இ.ஓ. சத்யா நாதெள்ளா கீழ் பணியாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்குள் இதற்கான ஒப்பந்தம் முழுதும் கைகூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary: Microsoft brought a LinkedIn Social Website.