பிளஸ் 2 படிப்பு முடித்த மாணவர்கள் நேரடியாக ஐந்து வருட சட்டப்படிப்பு மற்றும் நான்கு வருட மருத்துவ படிப்பு ஆகியவற்றை படித்து வருகின்றனர். ஆனால் பி.எட். படிப்பை அவர்கள் நேரடியாக படிக்க முடியாது. ஏதாவது ஒரு பட்டப்படிப்பை முடித்த பின்னரே அவர்கள் பி.எட் படிப்பை படிக்க முடியும் அல்லது 2 ஆண்டுகள் இடை நிலை ஆசிரியர் பயிற்சியை அவர்கள் மேற்கொள்ளலாம்.
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால் இந்த வருடம் முதல் பிளஸ் டூ படித்தவர்கள் நேரடியாக 4 வருட பி.எட். படிப்பை படிக்கலாம். 3 வருட பட்டப்படிப்பையும், 2 வருட பி.எட். படிப்பையும் ஒருங்கிணைத்து 4 வருட பி.எட். என்ற படிப்பாக படித்து முடித்து உடனே ஆசிரியர் வேலையில் சேரலாம். இந்த 4 வருட படிப்பை தமிழகத்தில் கொண்டுவர 17 பி.எட். கல்லூரிகளுக்கு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அனுமதி வழங்கி உள்ளது.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா இந்த ஆண்டு (2016-2017) முதல் அந்த படிப்பை தொடங்க உத்தரவிட்டுள்ளார். இதற்கான பாடத்திட்டமும் தயாராகி விட்டது. இந்த பாடத்திட்டங்களை ஜெயலலிதா வாங்கிப் பார்த்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் அந்த பாடத்திட்டம் தொடர்பாக சில ஆலோசனைகளையும் வழங்கினார். ஒரு சில நாட்களில் எந்த, எந்த கல்லூரிகளில் இந்த 4 வருட பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது என்ற அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும்
English Summary : Direct 4 B.Ed. year course for 12th students.