ஆசிய அளவில் சிறந்த பல்கலைக்கழகங்களை தரவரிசை படுத்தும் பணியில் பிரிட்டனைச் சேர்ந்த “க்யூஎஸ்’ என்ற தனியார் நிறுவனம் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் இந்த தரவரிசை பட்டியலை நேற்று இந்நிறுவனம் வெளியிட்டது.
ஆசிய அளவில் சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி 43வது இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு சென்னை ஐஐடி 56வது இடத்தில் இருந்த நிலையில் இந்த வருடம் ஆராய்ச்சி படிப்புகளுக்கு கொடுத்த முக்கியத்துவம் காரணமாக 13 இடங்கள் முன்னேறியுள்ளது. மேலும் ஆசிய அளவில் சிறந்த 50 பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில், பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் (ஐஐஎஸ்) 33வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு 34வது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) 35வது இடத்தையும், டெல்லி ஐஐடி 36வது இடத்தையும் பிடித்துள்ளது. அதேபோல் கான்பூர் ஐஐடி 48வது இடத்திலும் உள்ளன. ஆசிய அளவிலான முதல் 50 இடங்களில் சென்னை, டெல்லி, மும்பை, கான்பூர், பெங்களூர் ஆகிய பல்கலைக்கழகங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆசிய அளவில் முதல் இடத்தை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டும் இந்த பல்கலைக்கழகம் முதலிடத்தில் இருந்தது என்பது குரிப்பிடதக்கது. இதேபோல் சீனாவின் ஹாங்காங் பல்கலைக்கழகம் 2வது இடைத்தையும் பிடித்துள்ளது.
English Summary : Madras IIT achieved a breakthrough throughout Asia.