பார்வையற்றவர்கள் ஒரு குச்சியின் உதவியால் நடமாடி வருவதை பார்த்துள்ளோம். ஆனால் இனிமேல் அவர்களுக்கு அந்த நிலை இருக்காது. பார்வையற்றோர்களுக்கு என அதிநவீன கருவி ஒன்றை இளைஞர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இதன் உதவியோடு பார்வையற்றவர்கள் குச்சியின் உதவியால் இனி வேகமாக நடக்கலாம்.
‘லைவ் பிரெய்லி’ எனப் அழைக்கப்படும் இக்கருவியை 21 வயது அபிநவ் வர்மா என்பவர் உருவாக்கியுள்ளார். இதன் எடை வெறும் 30 கிராம் மட்டுமே. இந்த கருவியை பார்வையற்றவர்கள் கையில் அணிந்து கொண்டு சென்றால், அது கொடுக்கும் சமிக்ஞைகளின் உதவியால் யாருடைய உதவியும் இல்லாமல் மிக வேகமாக இயல்பாக நடக்கவும், செயல்படவும் முடியும்.
இக்கருவி 3.5 மீட்டர் தொலைவு வரை உள்ள பொருட்களை இனம் கண்டுகொண்டு, அணிந்து கொண்டிருப்பவருக்கு தொடு உணர்வு மூலம் சமிக்ஞைகளை அளிக்கிறது. கைகளில் காற்றை அலைந்தால்போதும், இக்கருவி சுற்றுப்புறத்தை உணர்ந்து கொள்கிறது. ஒருபொருளின் நகர்வை ஒரு நொடிக்கு 50 முறை உணர்ந்து கொண்டு அதிர்வு மற்றும் தொடு உணர்வுகளால் சமிக்ஞை தருகிறது.
இதனால் பொருளின் தன்மை, அது எவ்வளவு தொலைவில் இருக்கிறது, எவ்வளவு வேகமாக நகர்கிறது என அனைத்தையும் பார்வையற்றவர் உணர்ந்து கொள்ள முடியும். 3.5 மீட்டர் தொலைவுக்குள் இருப்பது புத்தகமா, சுவரா, மனிதரா என்பதையும் உணர முடியும்.
மினி, மினி-இ என இரு ரகங்களில் இந்தக் கருவி விற்பனைக்கு உள்ளது. குறைந்தபட்சம் ரூ. 20 ஆயிரம் மற்றும் அதிகபட்சம் ரூ.47 ஆயிரம் என விலையிடப்பட்டுள்ளது. எனினும், இந்தியாவில் மினி ரக லைவ் பிரெய்லி தொண்டு நிறுவனம் மூலம் ரூ.6,999 என்ற மானிய விலைக்கு அளிக்கப்படுகிறது.
மினி இ கருவியில் 32 ஜிபி வரை நினைவகம் இருப்பதால், ஆடியோ பதிவு செய்து கொள்ளலாம். சண்டீகரைச் சேர்ந்த அபிநவ் வர்மா பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிக்காக இதனை முதன்முறையாக தயாரித்து, தன் 18-வது வயதில் காப்புரிமை பெற்றார். அதன் பின் தற்போது அதனை மிக நவீனமாக மேம்படுத்தியுள்ளார். கடந்த மார்ச் மாதம் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட இக்கருவி 3 மாதங்களுக்குள் 16 நாடுகளில் விற்பனையாகியுள்ளது.
பார்வையற்றவர் குச்சி உதவியின்றி, மிகச் சுதந்திரமாக உலவ இக்கருவி உதவுகிறது. சந்தையில் கிடைக்கும் இதுபோன்ற பொருட்களை விட லைவ் பிரெய்லி நூறு மடங்கு மேன்மையானது என அபிநவ் தெரிவித்துள்ளார். இந்த கருவி குறித்த வேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள http://www.livebraille.com/ என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
English Summary : A great new tool for the blind. 21-year-old youngster record.