TATKAL_COUNTER_1__2434264fஇந்தியாவில் பொதுமக்கள் அதிகளவில் தங்கள் பயணத்திற்கு பயன்படுத்துவது ரெயில்களைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இந்தியன் ரெயில்வே பயணிகளின் வசதிக்காக அவ்வப்போது பல சலுகைகளை அறிவித்துவருகிறது. மேலும் இதுவரை கேன்சல் செய்யும் தட்கல் ரயில் டிக்கெட்டுக்களுக்கு பணம் திருப்பி அளிக்கப்படுவது இல்லை. ஆனால் இனிமேல் அந்த நிலைமை ரயில் பயணிகளுக்கு ஏற்படாது. ஆம், வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் கேன்சல் செய்யும் தட்கல் ரயில் டிக்கெட்டுக்களுக்கு 50% பணம் திருப்பி அளிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்தியன் ரயிவே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது: ஜூலை 1ஆம் தேதி முதல் ரயில் பயணிகள் தட்கல் டிக்கெட்களை பெறுவதற்கான நேரமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதியுள்ள பெட்டிகளுக்கான தட்கல் டிக்கெட்டுகளை காலை 10 மணி முதல் 11 மணி வரையிலும், படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கான தட்கல் டிக்கெட்டுகளை காலை 11 மணி முதல் 12 மணி வரையிலும் பயணிகள் பெறலாம். கேன்சல் செய்யப்படும் தட்கல் டிக்கெட்களின் கட்டணம் 50 சதவீதம் பயணிகளுக்கு திரும்ப அளிக்கப்படும்.

முக்கிய விழாக்காலங்களில் இயக்கப்படும் சுவிதா ரயில்களில் இனி ‘வெயிட்டிங் லிஸ்ட்’ கிடையாது எனவும் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளும், உட்காரும் வசதியுடைய RAC டிக்கெட்டுகளும் மட்டுமே இனி சுவிதா ரயில்களில் அளிக்கப்படும். மேலும் சுவிதா ரயில் டிக்கெட்டுகளை கேன்சல் செய்தால், கட்டணத்தில் பாதி பயணிகளுக்கு திரும்ப அளிக்கப்படும்.

ராஜ்தானி மற்றும் சதாப்தி ரயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். பல்வேறு மொழிகளில் டிக்கெட் பதிவு செய்யும் வசதியும் தொடங்கப்பட உள்ளது. இந்த புதிய மாற்றங்கள் முழுவதும் வரும் ஜூலை-1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

English Summary:Tatkal train tickets to cancellation fee of 50%. Railway Announcement