தமிழகம் முழுவதும் கலை அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடைபெற்று வரும் நிலையில் ஒருசில பிரிவுகளில் மாணவர்கள் குறைந்த அளவுகளிலே சேர்ந்திருப்பதாகவும் எனவே அந்த பிரிவுகளை மூடிவிட ஒருசில அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகள் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளது. இதுகுறித்து கலை- அறிவியல் கல்லூரிகளுக்கு கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகம் உத்தரவு ஒன்றை சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அரசால் ஒப்பளிக்கப்பட்ட பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை குறைவாக இருந்தாலோ அல்லது மாணவர் சேர்க்கையே இல்லை என்றாலோ அந்தப் பாடப் பிரிவை கல்லூரிகள் மூடிவிடக் கூடாது.
கல்லூரியில் இடம் கிடைக்காமல் தவிக்கும் ஏழை மாணவர்களை அந்தப் பாடப் பிரிவுகளில் சேர்க்க கல்லூரி நிர்வாகம் முயற்சிக்க வேண்டும். அவ்வாறு பாடப் பிரிவை மூடும் நிலை ஏற்பட்டால், அதற்கான உரிய காரணத்தைத் தெரிவிப்பதோடு, அந்த பாடப் பிரிவில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்புக்கு கல்லூரி செயலரும், முதல்வரும் உத்தரவாதம் அளிக்க வேண்டும். அத்துடன், கல்லூரி கல்வி இணை இயக்குநரின் ஆய்வுக்குப் பிறகு அரசின் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னரே அந்தப் பாடப் பிரிவை மூடவேண்டும்
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary:The main College to the circular sent to the Director of Education, Arts and Science Colleges