சென்னையின் முக்கிய அடையாளமாக கருதப்படும் மெட்ரோ ரயில் போக்குவரத்து கடந்த ஆண்டு கோயம்பேடு முதல் வரையிலான சேவை தொடங்கப்பட்டது. தற்போது இந்த பாதையில் விமான நிலையம் வரை பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டமும் முடிந்துவிட்டது. கோயம்பேடு முதல் விமான நிலையம் வரை விரைவில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது.
இந்நிலையில் திருமங்கலம்-எழும்பூர் வரையில் பல்வேறு கட்டங்களாக சுரங்கரெயில் பாதை அமைக்கும் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. சுரங்க தோண்டும் எந்திரம் (டெனல்) மூலம் நடக்கும் இந்த பணி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
திருமங்கலம்-ஷெனாய் நகர் வரையிலான பணிகள் முழுவதும் ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது ஷெனாய்நகர்-எழும்பூர் வரையிலான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பச்சையப்பா கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேருபூங்கா, எழும்பூர் ஆகிய மெட்ரோ ரெயில் நிலைய பணிகள் 85 சதவீதம் முடிவடைந்தன. கட்டிட கலை நுணுக்க பணிகள் மற்றும் எலக்ட்ரிக்கல் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.
நேரு பூங்கா-எழும்பூர் நிலையம் இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணி மிகவும் சவாலாக அமைந்துள்ளதாகவும் குறிப்பாக நேரு பூங்கா அருகில் உள்ள புளு டைமண்ட் ஓட்டலில் இருந்து எழும்பூர் வரை சுரங்க ரெயில் பாதை அமைக்கும் பணியில் மிகவும் கடினமாக இருததாகவும் மெட்ரோ ரெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த பாதையில் கடினமான பாறைகள் இருந்ததால் பணிகளை விரைவாக மேற்கொள்ள முடியவில்லை என்றும் சிங்கப்பூரில் இருந்து ஹிட்டாச்சி கம்பெனியின் டெனல் போரிங் மெஷின் வரவழைக்கப்பட்டு சுரங்க பணி மேற்கொள்ளப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்த பணி முழுமையாக முடிக்கப்படும் என்றும் ஷெனாய் நகரில் இருந்து எழும்பூர் வரை ஒரு புறத்தில் தண்டவாளம் அமைக்கும் பணி முடிந்துவிட்டதாகவும் .மற்றொரு புறம் தண்டவாளம் போடும் பணி விரைவில் தொடங்கவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை மக்களுக்கு சுரங்கபாதை மெட்ரொ ரெயில் சேவை எப்படி இருக்கும் என்ற உணர்வை விரைவில் உணர வைப்போம். ஷெனாய் நகர்-திருமங்கலம் இடையே சுரங்கப் பாதை , பணிகள் முற்றிலும் நிறை வடைந்துள்ளன. மின்பாதை அமைக்கும் பணிக்காக காத்திருக்கிறோம். இந்த பணி முடிந்தவுடன் இந்த பாதையில் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் மேலும் கூறினர்.
English Summary :Chennai people realize we’ll soon feel the Train tunnel. Metro officials