5-Practical-Steps-to-Improve-your-Facebook-Timelineஉலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் கணக்கு இல்லாதவர்களே கிட்டத்தட்ட இல்லை என்ற நிலையில் இளைஞர்கள் பெரும்பாலான நேரங்களை ஃபேஸ்புக்கில்தான் தங்கள் கவனத்தை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஃபேஸ்புக் இணணயதளம் வைரஸ் தாக்காத அளவிற்கு பாதுகாப்பானதாக இருப்பதாக சொல்லப்பட்டாலும், ஃபேஸ்புக் பயனாளிகளுக்கு வரும் நோட்டிபிகேஷன் மூலம் வைரஸ் வர வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பேஸ்புக்கில் பகிரப்படும் செய்திகள் மூலம், புகைப்படங்கள் வாயிலாக வைரஸ்கள் அதிகமாக பரவிவருகின்றன. நண்பர்கள் பெயரில் நம் பக்கத்திற்கு வரும் நோட்டிஃபிகேஷன்களால் நமது லேப்டாப், மொபைல் மற்றும் டெஸ்க்டாப்பிற்கு வைரஸ்கள் பரவுகின்றன.

புகைப்படங்கள் மூலம் வரும் அறிவிப்புகளால் மால்வேர் லேப்டாப்பிற்கு டவுன்லோடு ஆகிறது. இதனை கிளிக் செய்வதன் மூலம் வைரஸ் ஆக்டிவேட் ஆகிறது. குரோம் மட்டுமல்லாமல், எட்ஜ், பயர்ஃபாக்ஸ், சபாரி, ஒப்பேரா மூலம் இந்தவகை வைரஸ்கள் பரவுகின்றன.

அதனால் உங்கள் பக்கத்திற்கு வரும் நோட்டி பிகேஷன்களை கவனமாக கையாள வேண்டும். இந்த பிரச்சனை தீர்க்கப்படும் வரை நண்பர்களிடமிருந்து நோட்டிபிகேஷன் வந்தால் அதை ஜாக்கிரதையாக கையாள வேண்டும். அதனை கிளிக் செய்யாமல் தவிர்ப்பது மிகவும் நல்லது.

English Summary: Notification by the virus. Facebook Users alert