sslc_examsதமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் மாதம் 25-ம் தேதி வெளியனது. இந்த தேர்வில் 93.6 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதையடுத்து தாங்கள் பெற்ற மதிப்பெண்ணில் சந்தேகம் இருந்தால் தேர்வெழுதிய எந்தவொரு பாடத்திற்கும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கல்வித்துறை அறிவித்தது.

இதன்படி, தேர்ச்சி பெறாத மற்றும் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காத ஏராளமான மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தனர். பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் மூலமாகவும் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களது விடைத்தாள்கள் தனியாக பிரித்து எடுக்கப்பட்டு மறுகூட்டல் செய்யும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்றது.

இந்த பணி தற்போது முடிவடைந்துள்ள நிலையில், இன்று அவர்களின் மறுகூட்டலுக்கு பிந்தைய மதிப்பெண்களுடன் கூடிய பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. www.tndge.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் மறுகூட்டல் மதிப்பெண்களை அறிந்துகொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

English Summary:SSLC recalculate scores published in website