kabali3616இந்தியாவில் இன்னும் பல வீடுகளில் கழிவறை இல்லாமல் திறந்த வெளி கழிப்பிடங்களை உபயோகித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் கழிவறைகள் குறித்த விழிப்புணர்வுகளை அவ்வப்போது ஊக்குவித்து வருவதோடு, கழிவறை கட்டுவதற்கு மானியத்துடன் கூடிய நிதியுதவியும் செய்து வருகிறது. இந்நிலையில் கழிவறையை கட்டினால் ‘கபாலி டிக்கெட் தரப்படும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுனர் கிரண்பேடி வித்தியாசமான அறிவிப்பு ஒன்றை தனது டுவிட்டரின் மூலம் செய்துள்ளார்.

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்றவுடன் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் மூலம் புதுச்சேரியை பொலிவுள்ள நகராக மாற்றும் முயற்சியிலவர் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கிரண்பேடி தனது டுவிட்டரில் நேற்று மாலை ஒரு வித்தியாசமான டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில், “புதுச்சேரியில் வாழும் மக்கள் தங்கள் வீடுகளில் கழிவறை கட்டினால் இலவச திரைப்பட டிக்கெட் தர உள்ளதாகவும் இந்த டிக்கெட்டுக்களை புதுச்சேரி கலெக்டர் தருவார் என்றும் அறிவிப்பு செய்துள்ளார். இந்த திட்டம் நல்ல பலன் தரும்” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து புதுவை ஆட்சியர் ஜவஹர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “புதுச்சேரி மண்ணாடிப்பட்டில் செல்லிப்பட்டு கிராமம் உள்ளது. இங்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் இரு நாட்கள் ஆய்வு செய்தோம். அங்கிருந்த 772 வீடுகளில் 447 வீடுகளில் கழிவறை இல்லாதது அறிந்தோம். அதையடுத்து வீடுகளில் கழிவறை அவசியம் என்பதை வலியுறுத்தினோம். வீடுகளில் கழிவறை கட்ட அரசு ரூ. 20 ஆயிரம் மானியம் தருவதை தெரிவித்தோம். மேலும், கழிவறை கட்டுவதை ஊக்குவிக்க புதிய முயற்சியை எடுத்தோம்.

மக்கள் தாமாகவே முன்வந்து ஜூலை 15-க்குள் கழிவறை கட்டுவதை உறுதி செய்ய விரும்பினோம். அவ்வாறு கழிவறை கட்ட முன்வரும் குடும்பத்துக்கு ரஜினி நடித்த ‘கபாலி’ படத்தின் 4 டிக்கெட்டுகள் தர முடிவு எடுத்துள்ளோம். திரையரங்குகளுடன் பேசி இதற்கான ஏற்பாடுகள் அடுத்து செய்வோம்” என்று தெரிவித்தார்.

English Summary: Built a toilet get Kabali ticket free in Puducherry.