திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில், ரயிலில் வழக்கமாக இயங்கும் ரயில்களின் டிக்கெட்டுக்கள் முன்கூட்டியே விற்பனை ஆகிவிடுவதால் கடைசி நேரத்தில் பயணத்தை திட்டமிடும் பயணிகளின் வசதியை முன்னிட்டு இந்தியன் ரயில்வே ‘சுவிதா’ சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.
பயணிகளின் வருகைக்கு ஏற்ப இந்த ரயில்களில் கிராகி இருக்கும் ஆனால் அதே நேரத்தில் ‘சுவிதா’ ரயில்களில் கட்டணம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை சுவீதா மற்றும் சிறப்பு ரயில்களில் அனைத்து பெட்டிகளும், முன்பதிவு பெட்டிகளாக இருந்தது. இதனால், கடைசி நேரத்தில் பயணத்திட்டம் வகுப்பவர்களுக்கும் சிக்கல் நீடித்தது. இதையடுத்து, ‘சுவிதா’ சிறப்பு ரயில்களை முன்பதிவற்ற பெட்டிகளுடன் இயக்கும்படி, ரயில்வே அமைச்சகம் தற்போது உத்தரவிட்டுள்ளது.
இந்த ரயில்களில் இனி ‘லக்கேஜ்’ பெட்டியுடன் முன்பதிவு அற்ற பெட்டிகளும் இணைக்கப்படும். இந்த பெட்டிகளில் பயணிப்போருக்கு, வழக்கமாக, எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் அதிவிரைவு மெயில் ரயில்களில் வசூலிக்கக் கூடிய கட்டணமே வசூலிக்க வேண்டும் எனவும்
அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
English Summary: Unreserved Compartment Link into a Suvitha train.